கர்ப்பிணிகளின் கருவளர்ச்சிக்கு உதவி எலும்புக்கு வலுதரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கர்ப்பிணிகளின் கருவளர்ச்சிக்கு உதவி எலும்புக்கு வலுதரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு

கர்ப்பிணிகளின் கருவளர்ச்சிக்கு உதவி எலும்புக்கு வலுதரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு

I Jayachandran HT Tamil
Mar 01, 2023 07:35 PM IST

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்களும் நிறைந்துள்ளன.

சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. ரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்க உதவுகின்றது.

மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரைவள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் தடுக்க உதவும்.

கர்ப்பிணிகள் சர்க்கரைவள்ளி கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில் இதில் அதிக அளவில் போலெட்ஸ் நிறைந்துள்ளது.

இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் சத்துகளை அளித்து உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு நுரையீரலில் ஏற்படும் எம்பஸீமா நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்றும், குடல் புற்றுநோயில் தொடங்கி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்றும், இது உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, உடல் முழுவதையும் சுத்தம் செய்து, உடலை சர்வீஸ் செய்யும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உருளைக்கிழங்கை விட சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகள் அதிகம். இதைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். இதிலிருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவும். அனைத்துக்கும் மேல், வயது அதிகமாக அதிகமாக பார்வை மங்கும், சருமத்தில் சுருக்கம் ஏற்படும். இது போன்ற வயது முதிர்வினால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைத்து என்றும் இளமையாகக் காட்டும் சிறந்த உணவு சர்க்கரை வள்ளிக்கிழங்கு.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.