Benefits of Pumpkins : கண் பார்வையை கூர்மையாக்கும் இந்த காயை தினமும் உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்!
Benefits of Pumpkins : கண் பார்வையை கூர்மையாக்கும் இந்த காயை தினமும் உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்!

பரங்கிக்காய் அமெரிக்காவில் தோன்றிய காய், அறிவியல் ரீதியாக பரங்கிக்காய் ஒரு பழம்தான். ஆனால் அதை நாம் காய் பட்டியலில் வைத்துள்ளோம். அது பழம் என்று அழைக்கப்படுவதற்கு அதன் இனிப்பு சுவையும் காரணமாகும். இந்த இனிப்பு சுவைக்காக இந்த காயை யாரும் விரும்பி உண்ண மாட்டார்கள். ஆனால் இதை பிரதானமாக பல்வேறு உணவுகளில் இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
பரங்கிக்காயின் நன்மைகள்
கண்பார்வையை கூராக்கும்
ஒரு கப் பரங்கிக்காயில் நீங்கள் தினமும் உட்கொள்ள வேண்டிய அளவில் 200 சதவீதம் வைட்டமின் ஏ சத்து உள்ளது. அது கண்ணில் உள்ள கார்னியாவை பாதுகாத்து உங்கள் பார்வையை காக்கிறது. இரவு நேரத்தில கண்கள் நன்றாக தெரிவதற்கு உதவுகிறது. இதில் உள்ள லியூடீன் மற்றும் செக்ஸானின் ஆகிய சத்துக்கள், கண்களை கண்புரை நோய் உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களில் இருந்து காக்கிறது.
உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது
இதில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கின்றன.