தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Cycling : புற்றுநோய் ஆபத்துக்களை சைக்கிள் ஓட்டுவது குறைக்கிறதா? இன்னும் என்ன நன்மைகள் பாருங்க!

Benefits of Cycling : புற்றுநோய் ஆபத்துக்களை சைக்கிள் ஓட்டுவது குறைக்கிறதா? இன்னும் என்ன நன்மைகள் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Jun 25, 2024 03:14 PM IST

Benefits of Cycling : புற்றுநோய் ஆபத்துக்களைக்கூட சைக்கிள் பயிற்சி குறைக்கும் என்பது ஆச்சர்யமாக உள்ளதா, எனில் சைக்கிள் ஓட்டுவதால் எத்தனை நன்மைகள் ஏற்படுகிறது பாருங்கள்.

Benefits of Cycling : புற்றுநோய் ஆபத்துக்களை சைக்கிள் ஓட்டுவது குறைக்கிறதா? இன்னும் என்ன நன்மைகள் பாருங்க!
Benefits of Cycling : புற்றுநோய் ஆபத்துக்களை சைக்கிள் ஓட்டுவது குறைக்கிறதா? இன்னும் என்ன நன்மைகள் பாருங்க!

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நமக்கும், பூமிக்கும் ஆரோக்கியம் தரும் சைக்கிளிங் பயிற்சி

உங்கள் உடலை பராமரிக்க செலவில்லாத வழியாக சைக்கிள் ஓட்டுவது இருக்கும் என்பது எத்தனை உண்மை தெரியுமா? அதேநேரத்தில் நீங்கள் இந்த பூமியையும் காக்க முடியும். உங்கள் உடல் எடையை குறைப்பதில் சைக்கிள் ஓட்டுவது மிகவும் நல்லது. அதே நேரத்தில் சைக்கிள் ஓட்டும்போது நீங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறீர்கள். வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படாமல் இருக்கும். எனவே சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒட்டுமொத்த மன மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது

உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு சைக்கிள் ஓட்டுவது சிறந்தது. இரண்டையும் சமமாக்க உதவும். குறிப்பாக இன்றைய காலத்தில் எண்ணற்ற சவால்கள் உள்ளது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு நமக்கு சைக்கிள் ஓட்டுவது உதவுகிறது. 

சைக்கிள் ஓட்டுவதால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. உறக்கத்தின் தரத்தை அது அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. நேர்மறை எண்ணங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. உடலுக்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது

புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஆராய்ச்சி இதழில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது

வீட்டிற்கு உள்ளே சைக்கிள் ஓட்டுவது, வெளியில் செல்ல முடியாதவர்கள் ஒரு வழியாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், வெளியில் சைக்கிள் ஓட்டுவதுதான் சிறந்தது. அது உடல் நலனுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. 

வெளியில் சைக்கிள் ஓட்டும்போது, பசுமை நிற புல்வெளிகளை அதிகம் ரசிக்க முடியும். இயற்கையில் கரையலாம். புத்தம் புதிய காற்றை சுவாசிக்கலாம். எங்கு நீங்கள் சைக்கிள் ஓட்டினாலும் உடலின் ஆற்றல் அதிகரிப்பது உறுதி.

எடை குறைப்பு

சைக்கிளை உடற்பயிற்சிக்காக ஓட்டும்போது வேகமாக ஓட்டவேண்டும். அப்போது தூரம் மற்றும் வேகத்தைப் பொறுத்து 100 கலோரிகள் வரை குறைக்கலாம். இந்த கலோரி குறைப்பது என்பது, வயது, பாலினம், எடை இவற்றைப் பொருத்தும் மாறுபடும்.

கடும் வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

சைக்கிள் ஓட்டுவது இதயத்துக்கு மிகவும் நல்லது. இதய அரோக்கியம் காக்கப்படும். உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இதனால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

சுவாச மண்டல ஆரோக்கியம்

உடலின் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், உடல் ஆக்ஸிஜனை உறிஞ்சுவதை உறுதிசெய்கிறது. உடலின் மற்ற பாகங்களுக்கும் தசைகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதையும், பயிற்சிக்குப் பின்னரும் தசைகளுக்கு நன்மையையும் சைக்கிள் பயிற்சி தருகிறது.

உடற்பயிற்சி

ஏரோபிக் அல்லது சூம்பா போன்ற உயர்ந்த அழுத்தம் கொடுக்கும் பயிற்சியாக சைக்கிளிங் இருக்காது. இது குறைவான அழுத்தம் கொடுக்கும் ஒரு உடற்பயிற்சியாகும். இது உடலை இரும்பாக்கவும் உதவும். சைக்கிள் ஓட்டும்போது, காலின் தசைகள், முழு காலுமே ஈடுபடுகிறது. முட்டி, கணுக்கால் என அனைத்து உறுப்பும் ஈடுபடுவதால், மொத்த காலின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், கால் ஒன்றிணைந்து செயல்பட உதவுகிறது. இதனால் கால் தசைகள் வலுவடைகிறது.

உறக்கம் மற்றும் எலும்பு ஆரோக்கியம்

சைக்கிள் ஓட்டுவது, உறக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. உறங்கும் முறையையும் மாற்றுகிறது. இது ஒருவரின் எலும்பு ஆரோக்கியம் மற்றும் எலும்பு அடர்த்திக்கும் உதவுகிறது. உடலின் அடிப்பாகம் வலுவடைகிறது. உடலின் மேற்புறத்தை மேம்படுத்துகிறது. தண்டுவடத்தை காக்கிறது.

மன மற்றும் உணர்வு ரீதியிலான ஆரோக்கியம்

இது மனஆரோக்கியத்தை மட்டும் அதிகரிக்கவில்லை. மனஅழுத்தத்தையும் குறைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் வலுவடைகிறது. சைக்கிள் ஓட்டும்போது, மனித உடல் எண்டோர்ஃபின்களை வெளியிடுகிறது. 

இந்த எண்டோர்ஃபின்கள்தான் மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும் ஹார்மோன்கள் ஆகும். எனவே வெளியில் சென்று சைக்கிள் ஓட்டும்போது, அவர்களின் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தும் கிடைக்கிறது. இதனால் ஓட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.

வலுவான தசைகள்

மற்ற நன்மைளைவிட சைக்கிள் ஓட்டும்போது, தசைகள் நெகிழ்தன்மையும், வலுவும பெறுகின்றன. இது வலியை போக்குகிறது. வயோதிகம் தொடர்பான தசை தளர்வையும் குறைக்கிறது. மூட்டுகளில் இறுக்கத்தைப் போக்குகிறது. மூளை ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இது நினைவாற்றல் திறன்களை வளர்க்கிறது. இதனால் நினைவாற்றல், கவனம் ஆகியவை பெருகுகிறது.

சமூக தொடர்புகளை அதிகரிக்கிறது

சமூக தொடர்புகளை அதிகரிக்கிறது. புதிய தொடர்புகளை ஏற்படுத்துகிறது. இது நட்பையும் அதிகரிக்கச்செய்கிறது. நீங்கள் குழுவாக சேர்ந்து சைக்கிள் ஓட்டும்போது, அனைவருடனும் நட்பு பாராட்டுவதன் மூலம் உங்கள் சமூக எல்லைகள் விரிவடைகின்றன. உங்கள் உடலின் அதிகப்படியான எடையை குறைக்கச் செய்வதில் சைக்கிள் ஓட்டுவது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் ஐயமில்லை. எனவே பஸ், கார், பைக் என ஓட்டாமல், சாத்தியக்கூறு உள்ள இடங்களில் சைக்கிள் ஓட்டி பழகுவது நல்லது.