Benefits of Cowpeas : கர்ப்பத்தை எதிர்நோக்குகிறீர்களா? உங்களுக்கு உதவும் தட்டைபயிறு! தினம் ஒரு தானியம் அறிவோம்!
Benefits of Cowpeas : கர்ப்பத்தை எதிர்நோக்குகிறீர்களா? உங்களுக்கு உதவும் தட்டைபயிறு! தினம் ஒரு தானியம் அறிவோம்!

ஒரு கப் தட்டை பயிரில் 194 கலோரிகள் உள்ளது. இதில் 13 கிராம் புரதம், 0.9 கிராம் கொழுப்பு, 35 கிராம் கார்போஹைட்ரேட், 11 கிராம் நார்ச்சத்து, 88 சதவீதம் ஃபோலேட், 50 சதவீதம் காப்பர், 28 சதவீதம் தியாமின், 23 சதவீதம் இரும்பு, 21 சதவீதம் பாஸ்பரஸ், 21 சதவீதம் மெக்னீசியம், 20 சதவீதம் சிங்க், பொட்டாசியம் 10 சதவீதம், வைட்டமின் பி6 10 சதவீதம், செலினியம் 8 சதவீதம், ரிபோஃப்ளேவின் 7 சதவீதம் உள்ளது.
எடை மேலாண்மை
இதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து தட்டைப்பயிறை ஒரு கலோரிகள் குறைந்த ஒரு உணவாக வைத்துள்ளது. புரதம் அதிகம் நிறைந்த உணவுகளில் கெரிலின் அளவு அதிகம் உள்ளது. கெரிலின் என்ற ஹார்மோன்தான் பசியை அதிகரிக்கிறது. கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. அதனால் பசி உணர்வை குறைத்து வயிறு காலியான உணர்வை போக்குகிறது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால், வயிறு நிறைந்த உணவு, உடலுக்கு திருப்தியைக்கொடுக்கிறது. இதனால் எடை மேலாண்மை செய்ய முடிகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
தட்டைப்பயிறில் உள்ள குறைவான சாச்சுரேடட் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாததால் அது இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள், கொழுப்பு அளவை குறைத்து, இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. அதிகளவில் உள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் ட்ரைகிளிசெரைட்களை குறைத்து கெட்ட கொழுப்பை உடலிலல் பராமரிக்க உதவுகிறது.