Sesame Seeds: குளிர் காலத்துக்கு உகந்த உணவாக இருக்கும் எள் விதைகள்! காரணமும், பின்னணியும் இதோ
குளிர்காலம் என்பதால் நாள்தோறும் வெப்பநிலையானது குறைந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் உடலுக்கு வெப்பத்தை ஏற்படுத்தகூடிய உணவுகளை அனைவரும் தேடிப்பிடித்து சாப்பிடுவது வழக்கம் தான்.
அந்த வகையில் உங்கள் உணவில் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். இதில் மிக முக்கியமாக எள் விதைகள் உள்ளது. இவை ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதுடன், ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக இருக்கின்றன. குளிர்கால உணவில் எள்ளை ஏன் சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
எள் விதைகளில் துத்தநாகம், இரும்பு, வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, இந்த சிறிய விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. குளிர்கால நோய்களுக்கு எதிராக பாதுகாக்கின்றன. எனவே எள் வலுவான நோயெதிர்ப்பு அமைப்பாக இருப்பதுடன் தவிர்க்க முடியாத குளிர்கால நோய்களுக்கு எதிராக உங்கள் உடலை பாதுகாக்க உதவுகிறது.
உடலுக்கு கதகதப்பை தந்து ஆற்றலை மேம்படுத்துதல்
குளிர்ச்சியான இந்த காலநிலையில் உங்களது உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள வேலையை எள் விதைகள் செய்கின்றன. இதில் இருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் உடலை வெப்பமாக்க உதவுகின்றன. அத்துடன் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உங்கள் உடலிலுள்ள செல்களின் சவ்வு சமநிலையை பராமரிக்க உதவுகிறது. உடனடி ஆற்றலை தரும் வல்லமை எள் விதைகளில் இருப்பதால், சோம்பலை எதிர்த்துப் போராடும் வலிமையைக் கொடுக்கிறது.
கால்சியம் நிறைந்துள்ளது
எள் விதைகளில் அதிகளவு கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது. சூரிய ஒளி குறைவாக இருந்தால் உடலுக்கு தேவையான வெப்பத்தை தரக்கூடியதாக எள் விதைகள் இருந்து வருகிறது. இதில் மக்னீசியம், இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் நிரம்பியிருப்பதால் உடல் ஆரோக்கியத்தை பேந உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்