Bangalore Bisibelabath : பெங்களூர் ஒரிஜினல் பிசிபேலாபாத் – சும்மா வேற மாறி ருசி – ட்ரை பண்ணி பாருங்க!
Bangalore Bisibelabath : பெங்களூர் ஒரிஜினல் பிசிபேலாபாத் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – அரை கப்
கேரட் – ஒரு கைப்படி
பீன்ஸ் – ஒரு கைப்பிடி
உருளைக்கிழங்கு – ஒரு கைப்பிடி
கத்தரிக்காய் – ஒரு கைப்பிடி
முருங்கைக்காய் – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 5 கப்
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
(இந்த மசாலாவை அதிகம் செய்து நாம் சேமித்து வைத்துக்கொள்ளலாம். எப்போதெல்லாம் தேவையோ அப்போது பிசிபேலாபாத் செய்ய பயன்படுத்தலாம் அல்லது தினமும் செய்யும் சாம்பாருக்கு கூட உபயோகித்துக்கொள்ளலாம்)
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 3
மிளகாய் – 5
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்
கொப்பறை தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
மல்லித்தழை – கைப்பிடி
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
குடை மிளகாய் – ஒரு கைப்பிடி (நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
புளிக்கரைசல் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
புளியை 10 நிமிடம் சுடு தண்ணீரில் ஊறுவைத்து, கரைத்து, தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரிசி, துவரம் பருப்பு ஆகிய இரண்டையும் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை குக்கரில் சேர்த்து, நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றையும் சேர்க்கவேண்டும்.
மஞ்சள் தூள், உப்பு, ஒரு கப் அரிசிக்கு 5 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 4 விசில் விடவேண்டும். சாம்பார் சாதத்துக்கு தண்ணீர் நன்றாக குழைவாக வேக வேண்டும்.
கடாயை சூடாக்கி அதில், கடலை பருப்பு, உளுந்தம்பருப்பு, வர கொத்தமல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், பட்டை, கிராம்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வாசம் வரும் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.
இவற்றை வறுத்த பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலேயே, மிளகாய், கசகசா, எள்ளு, கொப்பறை தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கொடை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைச்ச மசாலா மற்றும் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
கொதி வந்தபின்னர், தயாராக உள்ள சாதத்தை இதில் சேர்த்து, நன்றாக கிளறவேண்டும். கொத்தமல்லித்தழை தூவி இறக்க சுவையான பெங்களூர் ஸ்டைல் பிசிபேலாபாத் சாப்பிட தயாராக உள்ளது.
வேற லெவல் சுவையில் இருக்கும். தேவைப்பட்டால் நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கலாம். இது முற்றிலும் உங்கள் விருப்பம் மட்டுமே. காராபூந்தி, அப்பளம் சேர்த்து பரிமாற சுவை அள்ளும்.
டாபிக்ஸ்