Banana Peel Powder : வாழைப்பழத் தோல் தூளில் இத்தனை பலன்கள் இருக்கா.. தலை முடி முதல் புற்றுநோய் தடுப்பு வரை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Peel Powder : வாழைப்பழத் தோல் தூளில் இத்தனை பலன்கள் இருக்கா.. தலை முடி முதல் புற்றுநோய் தடுப்பு வரை!

Banana Peel Powder : வாழைப்பழத் தோல் தூளில் இத்தனை பலன்கள் இருக்கா.. தலை முடி முதல் புற்றுநோய் தடுப்பு வரை!

Pandeeswari Gurusamy HT Tamil
May 28, 2024 07:54 PM IST

Banana Peel Powder: வாழைப்பழங்களை சாப்பிட்டவுடன் நாம் தூக்கி எறியும் பழத்தின் தோல் வீணானது இல்லை என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் அழகுக்காகவும், கூந்தல் பராமரிப்புக்காகவும் பழத்தோலைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். ஆனால் வாழைப்பழங்களை விட அதன் தோல் சிறந்தது என்று ஒரு ஆய்வுகள் நிரூபித்துள்ளது.

வாழைப்பழத் தோல் தூளில் இத்தனை பலன்கள் இருக்கா.. தலை முடி முதல் புற்றுநோய் தடுப்பு வரை!
வாழைப்பழத் தோல் தூளில் இத்தனை பலன்கள் இருக்கா.. தலை முடி முதல் புற்றுநோய் தடுப்பு வரை! (Pexels)

வாழைப்பழங்களை சாப்பிட்டவுடன் நாம் தூக்கி எறியும் பழத்தின் தோல் வீணானது இல்லை என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தியைப் பார்த்த மக்கள், அழகுக்காகவும், கூந்தல் பராமரிப்புக்காகவும் பழத்தோலைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். ஆனால் வாழைப்பழங்களை விட அதன் பழத்தோல் சிறந்தது என்று ஒரு ஆய்வுகள் நிரூபித்துள்ளது. அந்த ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

பேக்கரி பொருட்கள் தயாரிப்பில் பழத்தோல்

சிலர் கேக் மற்றும் பிற பேக்கரி பொருட்களை தயாரிப்பதற்காக பழத்தோலை காயவைத்து அரைப்பார்கள். இதுவும் ஆரோக்கியமானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பழத்தோலை அரைத்து முகம் மற்றும் கூந்தலில் தடவப்படுகிறது, ஆனால் இயற்கையாகவே யாரும் பழத்தோலை பேக்கிங்கிற்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் பழத்தோலின் பொடியை கேக் மற்றும் இதர உணவுப் பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்கின்றனர் விஞ்ஞானிகள். இவை பாதுகாப்பானது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

பழத்தோலின் பொடியைப் பயன்படுத்தும்போது பொருட்களின் சுவை குறைந்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை. ஏனெனில் பழத்தோல் தூளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்திய நுகர்வோர் அவை சிறந்த சுவை கொண்டவை என்று கூறுகிறார்கள். பழத்தோல் தூள் சேர்த்தால், தயாரிப்புகளில் செயற்கை நிறத்தை சேர்க்கக்கூடாது.

பொதுவாக கேக், ரொட்டி, குக்கீஸ் போன்ற பேக்கிங் பொருட்களில் பயன்படுத்தப்படும் கோதுமை மாவில் 10 சதவீதம் பழத்தோல் தூள் சேர்க்க வேண்டும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. பழத்தோல் பொடியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், தடிமனாக இருக்கும். 7.5 சதவிகிதம் பழத்தோல் பொடி சேர்த்தால், பொருட்களின் சுவை மற்றும் தோற்றம் கண்டிப்பாக மாறும். பழத்தோல் பேக்கிங் தயாரிப்புகளின் மற்றொரு நன்மை என்னவென்றால், அவை மூன்று மாதங்கள் வரை அப்படியே இருக்கும்.

பழத்தோலில் உள்ள சத்துக்கள்

கேக் அல்லது ரொட்டி தயாரிக்கும் போது 10 சதவிகிதம் கோதுமை மாவுக்குப் பதிலாக பழத்தோல் பொடியைச் சேர்ப்பதால் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக, தோலில் பல தாதுக்கள், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 6, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கலவைகள் உள்ளன. இவை அனைத்தும் அதனுடன் சமைப்பதன் மூலம் உடலுக்குள் நுழைகின்றன. மாம்பழம் மற்றும் பிற பழங்களின் தோல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆரஞ்சு தோல் ஏற்கனவே கேக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.

இனி நீங்கள் பழத்தை சாப்பிட்ட பின் தோலை தூக்கி எறியக்கூடாது. அவை உங்கள் அழகுக்காகவும் பயன்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள். 

முக பளபளப்புக்கு உதவும் வாழைப்பழ தோல் 

வாழைப்பழத் தோலின் உட்புற பகுதியை சருமத்தில் தடவி அந்தப் பகுதியை மெதுவாக தேய்த்து மசாஜ் செய்து 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே காய விட வேண்டும் பிறகு சாதாரண நீர்கொண்டு சருமத்தை கழுவலாம். இதனால் தடிப்பு, தோல் அலர்ஜி போன்ற எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இப்படி மசாஜ் செய்வதால் முகம் பளபளப்படையும்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.