முடி உதிர்வதால் ஆங்காங்கே தோன்றும் வழுக்கை; கொத்துக்கொத்தாக கொட்டும் முடியால் அவதி! எளிய தீர்வு!
முடி உதிர்வதால் ஏற்படும் வழுக்கைக்கு தீர்வு.
கொத்துக்கொத்தாக முடி கொட்டுவதால் உங்கள் தலையில் ஆங்காங்கே ஏற்பட்ட வழுக்கையில் மீண்டும் முடி முளைக்க வேண்டுமா? அதற்கு என்ன செய்யலாம் என்று பாருங்கள். வழுக்கை விழுந்த இடங்களில் முடி முளைக்கச்செய்ய வேண்டும் என்றால், அதற்கு விளக்கெண்ணெய் உதவும். நீங்கள் வழுக்கை விழுந்த இடங்களில் விளக்கெண்ணெயை வைக்கும்போது, அது அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால், உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதனால் மீண்டும் முடி வளர்வது தூண்டப்படுகிறது. இதன் அதிகப்படியான ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் இதற்கு உதவுகின்றன.
நேரடியாக வைத்துக்கொள்வது
விளக்கெண்ணெயை வழுக்கை விழுந்த இடங்களில் தடவவேண்டும். இதை தினமும் செய்வது தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை
விளக்கெண்ணெயும், தேங்காய் எண்ணெயும் சேர்த்து கலந்து சில மணி நேரங்கள் வைத்துவிட்டு, அதை தலையில் தடவவேண்டும். இது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது.
விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை
விளக்கெண்ணெயும், கற்றாழையில் உள்ள ஜெல் பகுதியையும் சமஅளவு எடுத்து, மிதமாக சூடாக்கி தலை முடியின் வேர்க்கால்களில் தடவவேண்டும். இது உங்களுக்கு ஆரோக்கியமான தலைமுடி கிடைக்க உதவுகிறது. முடி நீளமாக அடர்ந்து படர்ந்து வளரச்செய்கிறது.
விளக்கெண்ணெய் மற்றும் வெங்காயச் சாறு
விளக்கெண்ணெயையும், வெங்காயச்சாற்றையும் கலந்துகொள்ளவேண்டும். இதையும் மிதமான சூடாக்கி, உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால், அது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு வலுதரும்.
விளக்கெண்ணெயை சூடாக்கித்தருவது
வெறும் விளக்கெண்ணெயை மட்டும் சிறிது நேரம் சூடாக்கி, இதமான சூட்டில் தலையில் தடவினால், அது தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தலைக்கு தேவையான ஈரப்பதத்தைத் தரும்.
விளக்கெண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய்
விளக்கெண்ணெயில் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை கலந்து தடவினால், அது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை தூண்டி, தலைமுடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
முட்டையின் மஞ்சள் கரு மற்றும் விளக்கெண்ணெய்
முட்டையின் மஞ்சள் கருவையும், விளக்ணெணெயையும் கலந்து தடவினால், அது உங்கள் தலைமுடியை வலுப்படுத்தும். உங்கள் தலைமுடிக்கு தேவையான புரதச்சத்துக்களைத் தரும்.
விளக்கெண்ணெய் மற்றும் வெந்தய பேஸட்
வெந்தயத்தை பொடித்து விளக்கெண்ணெயில் கலந்து ஒரு பேஸ்ட் பதத்தில் தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலையை அலசவேண்டும். இவ்வாறு செய்யும்போது, அது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும். இது தலைமுடி வளர்ச்சிக்கான இயற்கை தீர்வாகும். ஆனால் இதை குளிர் காலத்தில் செய்யும்போது சளி பிடித்துக்கொள்ளும். வெயில் காலத்தில் செய்வது நல்லது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்