முதுகெலும்பு, இதயம் கிடையாது..உணவு சங்கிலிக்கு இன்றயமையாத கடல் வாழ் உயிரினம்! ஜெல்லீ மீன் பற்றி சுவாரஸ்ய விஷயங்கள்
World JellyFish Day: முதுகெலும்பு, இதயம் இல்லாதவிட்டாலும், உணவு சங்கிலிக்கு இன்றயமையாத கடல் வாழ் உயிரினமாக ஜெல்லீ மீன்கள் இருக்கின்றன. வரலாறு, முக்கியத்துவம் முதல் பின்னணி வரை உலக ஜெல்லீ மீன் தினம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

முதுகெலும்பு, இதயம் கிடையாது..உணவு சங்கிலிக்கு இன்றயமையாத கடல் வாழ் உயிரினம்! ஜெல்லீ மீன் பற்றி சுவாரஸ்ய விஷயங்கள்
ஜெல்லி மீன்கள் கடலின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் ஜெல்லி போன்ற கடல் உயிரினங்கள் ஆகும். கடலின் சூடான பகுதிகள் முதல் குளிர்ந்த பகுதிகள் முதல் ஆழமான நீர் மற்றும் கடற்கரை வரை, ஜெல்லீ மீன்கள் எந்த சூழலிலும் செழித்து வளரும் உயிரினங்களாக உள்ளன. இந்த மீன்களுக்கு மற்ற கடல்வாழ் உயிரினங்களிலிருந்து வித்தியாசமாகத் தெரிகின்றன.
உலக ஜெல்லீ மீன் தினம் வரலாறு
கடந்த 2014 முதல், நவம்பர் 3 உலக ஜெல்லீ மீன் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நவம்பர் மாதமும் தெற்கு அரைக்கோளத்தில் வசந்த காலம் தொடங்கும் நிலையில், ஜெல்லீ மீன்கள் வடக்கு அரைக்கோளத்தின் கடற்கரையோரங்களுக்கு இடம்பெயருகிறது.