Girl Baby Names : அ, ஆ எழுத்தில் பெண் குழந்தைகளின் பெயர்கள்.. அதுவும் இந்த பெயர் அதிர்ஷ்ட பெயராம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : அ, ஆ எழுத்தில் பெண் குழந்தைகளின் பெயர்கள்.. அதுவும் இந்த பெயர் அதிர்ஷ்ட பெயராம்!

Girl Baby Names : அ, ஆ எழுத்தில் பெண் குழந்தைகளின் பெயர்கள்.. அதுவும் இந்த பெயர் அதிர்ஷ்ட பெயராம்!

Divya Sekar HT Tamil
Aug 14, 2024 11:56 AM IST

Girl Baby Names : அ, ஆ எழுத்தில் பெண் குழந்தைகளின் பெயர்களை அதன் அர்த்தத்தோடு இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். எனவே நீங்கள் இந்தப் பெயர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அ, ஆ எழுத்தில் பெண் குழந்தைகளின் பெயர்கள்.. அதுவும் இந்த பெயர் அதிர்ஷ்ட பெயராம்!
அ, ஆ எழுத்தில் பெண் குழந்தைகளின் பெயர்கள்.. அதுவும் இந்த பெயர் அதிர்ஷ்ட பெயராம்!

அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

மிகவும் கவனம் தேவை

எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு. அந்த வகையில் ஆண் குழந்தையின் பெயர்களும் அந்த பெயருக்கான அர்த்தமும் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

உங்கள் பெண் குழந்தைகளுக்கு பெயர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு இங்கு சில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அ, ஆ எழுத்தில் பெண் குழந்தைகளின் பெயர்களை அதன் அர்த்தத்தோடு இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். எனவே நீங்கள் இந்தப் பெயர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அத்விதா

தனித்துவமானது என்பது பொருள். இந்த கவர்ச்சிகரமான சமீபத்திய பெயரைக் கொண்ட குழந்தைக்கு பின்வரும் பண்புகள் இருக்கலாம். மனிதாபிமானம், சுயநலம், உறுதியான, உதவும், அமைதியற்ற பண்புகள் இருக்கலாம்.

ஆதிரா

ஆதிரை, அல்லது ஆதிரா பெண் குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய அழகிய பெயர் ஆகும் திருவாதிரை என்கிற நட்சத்திரத்தின் பெயரை ஆதிரை / ஆதிரா என்று பெண்களுக்கு சூட்டுகிறார்கள். கேரளத்தில் ஆதிரா என்கிற பெயர் அதிகம் வைக்கிறார்கள். தமிழ் நாட்டில் இது குறைவு. அனைத்தையும் உருவாக்குபவள்" , "முதன்மையானவள்" என்று இருவிதமான அர்த்தங்களை, இப்பெயருக்குக் கூறலாம்.

அமியா

மகிழ்ச்சியான அல்லது கவர்ச்சியான என்பது பொருள். அதுமட்டும் அல்லாது அழியாத; பிரியமான அல்லது மகிழ்ச்சியான என்பதும் அர்த்தம்.

அபிபிரிதி

நிறைய காதல் என்பது இப்பெயரின் பொருள் ஆகும். இந்த பெயர் தனித்துவமான பெயர் என்றே சொல்லலாம்.

அக்ஷிதி

அழியாதது என்பது பொருள். மேலும் அமைதியானது, வீட்டு அன்பானது, விவரம் சார்ந்த, கீழ்ப்படிதல், நம்பகமான, தர்க்கரீதியான, செயலில், ஒழுங்கமைக்கப்பட்ட, பொறுப்பான மற்றும் நம்பகமானதாகும்.

அம்ருஷா

திடீரென்று என்பதுபொருள். அதுமட்டும் அல்லாது வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ளதாகும். மற்றவர்களுக்கு உதவுவதற்கான அன்பை பிரதிபலிக்கிறது. ஒரு தளர்வான சூழ்நிலையை உருவாக்க முடிகிறது, இதனால் மக்களைச் சிரிக்கவும் உற்சாகப்படுத்தவும் முடியும்.

ஆர்யா

எப்பொழுதும் மரியாதைக்குரியவர் என்பது பொருள். மேலும் புத்திசாலி, வேடிக்கையான அன்பானவர், மூளை மற்றும் தாராளமானவர். காதல் ஒரு சாகச வாழ்க்கையை நாடுகிறது, எப்போதும் புதிய விஷயங்களைக் கண்டறிய ஏங்குகிறது

ஆஸ்திகா

கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பது பொருள். மகாபாரதத்தில், ஆதி பருவத்தில் கூறப்படும் ஜரத்காரு என்ற முனிவருக்கும், வாசுகியின் தங்கையான ஜரத்காரு என்ற நாககன்னிக்கும் பிறந்தவர். தன் தாய் ஜரத்காரு வேண்டுதலுக்கு இணங்க, ஜனமேஜயனின் நாக வேள்வியை நிறுத்தியதன் மூலம், நாக வேள்வியில் வீழ்ந்து இறக்கின்ற நிலையில் இருந்த தன் தாயின் இனத்தாரான தட்சகன் முதலான நாகர்களை காத்தவர் ஆஸ்திகர் என்ற இளம் வயது முனிவர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.