காலையில் ப்ரேக் ஃபாஸ்டாக இந்த உணவுகளா? வேண்டவே வேண்டாம்! அசிடிட்டியை கொண்டு வரும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காலையில் ப்ரேக் ஃபாஸ்டாக இந்த உணவுகளா? வேண்டவே வேண்டாம்! அசிடிட்டியை கொண்டு வரும்!

காலையில் ப்ரேக் ஃபாஸ்டாக இந்த உணவுகளா? வேண்டவே வேண்டாம்! அசிடிட்டியை கொண்டு வரும்!

Priyadarshini R HT Tamil
Nov 08, 2024 11:01 AM IST

காலையில் ப்ரேக் ஃபாஸ்டாக இந்த உணவுகளா? வேண்டவே வேண்டாம், அசிடிட்யை கொண்டு வரும். எனவே இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

காலையில் ப்ரேக் ஃபாஸ்டாக இந்த உணவுகளா? வேண்டவே வேண்டாம்! அசிடிட்யை கொண்டு வரும்!
காலையில் ப்ரேக் ஃபாஸ்டாக இந்த உணவுகளா? வேண்டவே வேண்டாம்! அசிடிட்யை கொண்டு வரும்!

அசிடிட்டி ஏற்பட காரணம்

வயிற்றில் அசிடிட்டி ஏற்பட வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலங்கள்தான் காரணமாகின்றன. இது உங்கள் வயிற்றில் அசவுகர்யங்களை ஏற்படுத்தி, உங்களுக்கு நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் காலையில் தவிர்க்கவேண்டிய சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை கொண்டவை, அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துககொள்ளும்போது, அவை வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. மேலும் வயிற்றில் உள்ள குடல் சுவர்களை பாதிக்கின்றன. இவற்றில் அதிகப்படியான அமில உட்பொருட்கள், இவற்றை சாப்பிடும்போது, வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்துகிறது. இது நெஞ்செரிச்சல் அறிகுறிகளை மோசமடையச் செய்கிறது.

தக்காளி

தக்காயில் இயற்கையில் அதிகளவில் அமிலம் உள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரிக் மற்றும் மாலிக் ஆசிட் அமிலங்களின் அளவுதான் காரணமாகிறது. எனவே வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடும்போது அது உங்கள் வயிற்றில் அமில சமமின்மையைத் தூண்டுகிறது. இதனால் உங்களுக்கு அசிடிட்டி அறிகுறிகள் ஏற்படுகிறது. குறிப்பாக உங்களுக்கு சென்சிட்டிவ் வயிறு இருந்தால் அது பாதிப்புக்களை மேலும் அதிகரிக்கிறது.

காபி

காபி உங்கள் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கும். அது உங்கள் வயிற்றில் ஆசிட் ரிஃப்ளக்ஸை தூண்டி, காலையில் எழுந்தவுடன் நீங்கள் பருகும்போதே உங்கள் வயிற்றுக்கு கேட்டைக்கொண்டுவருகிறது. எனவே காபியை நீங்கள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகுவதை தவிர்க்கவேண்டும். மேலும் அதை தாமதமாக ஏதேனும் ஒரு உணவுடன் எடுத்துக்கொள்ளலாம். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படாது. செரிமான கோளாறுகள் ஏற்படாது.

கார உணவுகள்

காலையில் முதல் உணவாக கார உணவுகளான மிளகாய், மிளகு, ஹாட் சாஸ்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. இது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும், வயிற்றில் உள்ள அடுக்குகளை பாதிக்கும். மேலும் அமில உற்பத்திக்கு வழிவகுக்கும். வெறும் வயிற்றில் கார உணவுகளை சாப்பிடும்போது, இது வயிற்றுக்கு எரிச்சலைக் கொடுக்கும். இது ஆசிட் ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும்.

கார்பனேடட் குளிர் பானங்கள்

கார்பனேடட் பானங்கள், சோடா கலந்த பானங்களை பருகினால், அது வயிற்றில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். இது வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் அழுத்தத்தைக் கொண்டு வரும். இதனால் வயிற்றில் ஈசோஃபாகஸ் தொல்லை ஏற்படும். இது அமில ரிஃப்ளக்ஸை மோசமடையச் செய்யும். இது வயிற்றில் அசவுகர்யத்தை ஏற்படுத்தும். எனவே காலை வெறும் வயிற்றில் சோடா கலந்த பானங்களை பருகுவதை தவிர்க்கவேண்டும்.

சாக்லேட்

சாக்லேட்டில் கஃபைன் மற்றும் தியோப்ரோமைன் உள்ளது. இது உங்கள் ஈசாஃபஜியல் ஸ்ஃபின்க்டரை அவிழ்த்துவிட்டு, உங்கள் வயிறு ஆசிட்டை பின்புறம் தள்ள உதவுகிறது. எனவே சாக்லேட்களை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அது வெறும் வயிற்றில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கிறது.

பொரித்த உணவுகள்

காலையிலேயே பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை முதல் உணவாக சாப்பிடக்கூடாது. சமோசா, ஃபிங்கர் ஃப்ரை போன்றவற்றை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, இது ஆரோக்கியமற்ற கொழுப்புக்களை உங்கள் உடலுக்குள் கொண்டு வருகின்றன. இதனால் உங்கள் உடலில் அதிகளவில் அசிட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் வயிறு உப்புசம் மற்றும் அசவுகர்யங்கள் ஏற்பட்டு, ஆசிட் ரிஃப்ளக்ஸை மோசமாக்குகிறது.

பூண்டு மற்றும் வெங்காயம்

பூண்டு மற்றும் வெங்காயத்தில் ஈசாஃபாஜியல் ஸ்பின்க்டரை அவிழ்த்துவிடும் தன்மை உள்ளது. இது வயிறு அமிலத்தை மேல்நோக்கி செலுத்துகிறது. எனவே அவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. அசிடிட்யை மோசமடையச்செய்கிறது.

பச்சை காய்கறிகள்

சமைக்காத பச்சை காய்கறிகளை வெறும் வயிற்றில் காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம், அதனால் இவற்றை செரிக்கச் செய்வதில் சிக்கல் உண்டாகும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் இதை செய்யும்போது அது வயிற்றுக் கூடுதல் சுமைதான். இதனால் அசிடிட்டி அதிகரிக்கும். செரிமானக்கோளாறுகள், ஆசிட் ரிஃப்ளக்ஸ்கள் ஏற்படும். இதை நீங்கள் மற்ற உணவுகளுடன் சேர்த்துதான் எடுத்துக்கொள்ளவேண்டும். தனியாக சாப்பிடக்கூடாது.

ஆல்கஹால்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மது அருந்தினால், அது உடல் நலனுக்கு பெரும் கேடு விளைவிப்பதாகும். இது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். இது வயிறு அடுக்குகளில் அமிலத்தை அதிகளவில் சுரக்கச் செய்யும். மேலும் உங்களுக்கு அசிடிட்டி இருந்தால், அதை மோசமடையச் செய்யும். இது செரிமான கோளாறுகளை நாள் முழுவதும் ஏற்படுத்தும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.