தீபாவளி ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, தொங்கும் தொப்பை! அதை குறைத்து, தட்டையான வயிறு பெற வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகள் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தீபாவளி ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, தொங்கும் தொப்பை! அதை குறைத்து, தட்டையான வயிறு பெற வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகள் உதவும்!

தீபாவளி ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, தொங்கும் தொப்பை! அதை குறைத்து, தட்டையான வயிறு பெற வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Nov 01, 2024 12:49 PM IST

தீபாவளி ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, தொங்கும் தொப்பை! அதை குறைத்து, தட்டையான வயிறு பெற வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகள் உதவும்!

தீபாவளி ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, தொங்கும் தொப்பை! அதை குறைத்து, தட்டையான வயிறு பெற வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகள் உதவும்!
தீபாவளி ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, தொங்கும் தொப்பை! அதை குறைத்து, தட்டையான வயிறு பெற வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகள் உதவும்!

நடைப்பயிற்சி மற்றும் ஓட்டம்

இதயத்துக்காக உடற்பயிற்சியான வேக நடை அல்லது ஓட்டம் உங்கள் உடலில் கலோரிகளை எரிக்க உதவும். இது உங்கள் ஒட்டுமொத்த உடலின் கொழுப்பை குறைக்க உதவும். இதில் உங்கள் தொப்பையும் குறைக்கப்படும். உங்கள் அன்றாட பயிற்சிகளில் இந்த உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு நல்லது. இதனால் உங்களின் கொழுப்புகள் கரைந்தோடும். இதை நீங்கள் தினமும் செய்ய வேண்டும். இதனால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.

காலை உயர்த்துவது

படுத்துக்கொண்டு கால்களை செங்குத்தாக உயர்த்துவது, அடிவயிற்றில் உள்ள தசைகளை குறைக்க உதவுகிறது. உங்கள் காலை கட்டுப்படுத்தி, மெதுவாக உயர்த்திக்கொண்டே செல்ல வேண்டும். இதனால் உங்கள் வயிற்றுக்கு வலு கூடுகிறது. இது உங்கள் வயிற்றுப்பகுதியில் குறையவே மாட்டேன் என அடம்பிடிக்கும் சதையைக் கூட குறைக்கிறது.

பர்பீஸ்

பர்பீஸ் எனப்படும் உடற்பயிற்சி, கடும் இதய பயிற்சியாகும். அதைச் செய்யும்போது, உங்களுக்கு உடலில் உள்ள அனைத்தை தசைகளும் அதில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்துகிறது. கலோரிகளை எரிக்கிறது. உங்கள் தொப்பையை தட்டையாக்குகிறது. ஒட்டுமொத்த உடலையும் பலப்படுத்துகிறது. உடலின் தாங்கும் ஆற்றலை மேம்படுத்துகிறது.

பிளாங்க் உடற்பயிற்சி

உங்கள் உடல் முழுவதற்கு பயிற்சி கொடுப்பதற்கு பிளாங்க் பயிற்சி மிகவும் ஏற்றது. இது உங்கள் முழு உடலையும் நிலைப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலை நேரான கோட்டில் நிலைநிறுத்த உதவுகிறது. இது உங்கள் வயிற்றை வலுப்படுத்துகிறது. பின்புறம் மற்றும் தோள்பட்டைகளை வலுப்படுத்துகிறது. இது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதை தொடர்ந்து செய்வதால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

ஹை இன்டன்சிட்டி இன்டர்வல் பயிற்சி

இந்த உடற்பயிற்சியைச் செய்யும்போது, உங்களுக்கு உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. இது உங்கள் உடலின் வளர்சிதையையும் மாற்றுகிறது. இதை நீங்கள் பல காலம் செய்யும்போது, அது உங்கள் உடலுக்கு ஆற்றலைக்கொடுக்கிறது. இது சிறந்த தொப்பையில் உள்ள கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சியாகும்.

சைக்கிள் ஓட்டுவது

சைக்கிள் ஓட்டுவதற்கு சைக்கிள் இல்லையே எனக் கவலை வேண்டாம். சைக்கிள் இல்லாமலே இந்த பயிற்சியை நீங்கள் செய்யலாம். இந்த பயிற்சி மேல் மற்றும் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களை கரைத்து ஓடச்செய்ய உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் படுத்துக்கொண்டு இரு கால்களையும் தூக்கி, சைக்கிள் ஓட்டுவது போல் செய்யவேண்டும். இதனால் உங்களின வயிறு, இடுப்பு, தொடை ஆகிய அனைத்து பகுதிகளும் நல்ல வலுப்பெற உதவுகிறது. இது உங்களுக்கு கொழுப்பை எரிக்க உதவுகிறது.

மலையேறும் பயிற்சி

இதுவும் பெயர் இப்படியுள்ளதே என வருத்தப்படவேண்டாம். இதற்காக நீங்கள் மலைகளைத் தேடிச் செல்ல தேவையில்லை. இந்த பயிற்சியையும் நீங்கள் வீட்டில் இருந்தே செய்துவிட முடியும். இந்த பயிற்சி உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. நீங்கள் மலையேறுவதுபோல் தரையிலே பயிற்சி செய்யும்போது, அது உங்கள் முழு உடலுக்கும் பயிற்சி கொடுக்கிறது. உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. உங்களின் தசைகள் அனைத்தும் வலுப்பெற உதவுகிறது. இதை ந்ங்கள் தொடர்ந்து செய்யும்போது, கலோரிகளை குறைக்கிறது. உங்கள் வயிற்றுப்பகுதிக்கு வலு சேர்க்கிறது. உங்களின் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது.

ரஷ்யன் டிவிஸ்ட்

ரஷ்யன் டிவிஸ்ட் என்பது, உங்களின் தசைகளில் கவனம் செலுத்துகிறது. இது உங்களுக்கு இடுப்பின் இரு புறங்களிலும் உள்ள தசைகளை குறைக்க உதவுகிறது. நீங்கள் காலை குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டு, கையில் சிறிய எடையை தூக்கிக்கொண்டு அதனுடன், இருபுறத்திலும் நகர்த்தவேண்டும். இதை நீங்கள் வேகமாக செய்யும்போது, அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இது உங்களுக்கு இடுப்புக்கு கீழே உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.