தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Animal Protein Vs Plant Protein: Which One Is Better?

Animal Protein vs Plant Protein: உடலின் கட்டுமானமாக இருந்து வரும் புரதம்! விலங்குகள் vs தாவரம் - எது சிறந்தது

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 02, 2024 09:01 PM IST

உடலின் கட்டுமானமாக இருந்து வரும் புரதம் பல்வேறு வகைகளில் பெறலாம். இதில் விலங்குகளின் மூலமாகவும், தாவரங்கள் மூலமாகவும் புரதங்கள் கிடைக்கின்றன. இவை இரண்டில் எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.

விலங்குகள் vs தாவரம் எந்த புரதம் சிறந்தது
விலங்குகள் vs தாவரம் எந்த புரதம் சிறந்தது

ட்ரெண்டிங் செய்திகள்

உடலுக்கு புரத சத்துக்களை தருவதில் இறைச்சி, தாவரங்கள் ஆகியவற்றில் எது சிறந்தது என்பது குறித்து நீண்ட காலமாக பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. விலங்குகள், இறைச்சிகளில் இருந்து கிடைக்கப்படும் புரதங்கள் முழுமையானதாக இருப்பதுடன் அதில் அமினோ அமிலங்கள் இடம்பிடித்திருக்கும்.

அதேசமயம் சில தாவர வகைகளில் இருந்து கிடைக்கும் புரதங்கள் முழுமை இல்லாமல் இருப்பதாக உள்ளது. இருப்பினும் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கு எது சிறந்தது என்பதை தீர்மானத்து எடுத்து கொள்வதன் மூலம் பலனை பெறலாம்.

புரதம் ஏன் தேவைப்படுகிறது?

உடலின் பல்வேறு வகையான செயல்பாட்டுக்கு புரதம் அத்தியாவசியமானதாக உள்ளது. திசுக்கள், தசைகள், உறுப்புகள், நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்திக்கான கட்டுமானப் பொருளாக புரதம் செயல்படுகிறது. இது தசை நிறையை சரிசெய்யவும், கட்டமைக்கவும் உதவுகிறது. வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஆதரிக்கிறது. உடனடியாக வயிறு நிரம்பிய உணர்வை தந்து திருப்திப்படுத்துகிறது.

விலங்குகளின் புரதங்களால் கிடைக்கும் நன்மைகள்

விலங்குகள் அல்லது இறைச்சிகளில் புரதம் மெலிதான இறைச்சி, மீன், முட்டை, பால் சார்ந்த உணவுகளில் மூலம் கிடைக்கிறது, இவை தாவரங்களில் கிடைக்கும் புரத சத்துக்களை காட்டிலும் முழுமையானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதில் உடலுக்கு அடிப்படை தேவையான அமினோ அமிலங்கள், திசுக்களை உருவாக்குதல் மற்றும் சரிசெய்தல், நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

இந்த புரதங்கள் முக்கிய ஊட்டச்சத்துகளான வைட்டமின் பி12, இரும்பு, துத்தநாகம், ஒமேகா 2 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உள்ளன. இவை மூளை ஆரோக்கியம், சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக்கம், நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பாடு, ஒட்டுமொத்த உயிர் சக்தியை பெற உதவுகிறது

மிக முக்கியமாக உடல் எடையை நிர்வகிக்க உதவுவதுடன், வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது கட்டுப்படுவதுடன், சாப்பிடும் கலோரி அளவும் குறைகிறது.

தாவர புரதங்களால் கிடைக்கும் நன்மைகள்

பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், நடஸ், விதைகள் போன்றவற்றில் புரதத்துடன், நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவி சீராக வைக்க உதவுகிறது. தாவர புரதங்கள் நிறைவுற்ற கொழுப்புகள் அளவை குறைவாக கொண்டுள்ளது. இதனால் இருதயத்துக்கு ஆரோக்கியமாக இருப்பதுடன், அதுதொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது

அடிப்படை ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ ஊட்டச்சத்துகள் நிறைந்திருந்து தாவர புரதங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் நன்மை தருகிறது.

விலங்குகள் புரதம் - தாவர புரதம், எது சிறந்தது?

இந்த இரண்டில் இருந்தும் கிடைக்கும் புரதங்களில் ஆதாரம், ஆரோக்கியம், சுற்றுச்சூழலின் விளைவுகள் ஆகியவற்றில் வேறுபாடு மிக்கதாக இருக்கின்றன. விலங்குகள் புரதம் இறைச்சிகள், பால் சார்ந்த பொருள்களில் கிடைப்பதுடன் அதிக அளவிலான நிறைவுற்ற கொழுப்புகள், வைட்டமின் பி12, அமேனோ அமிலங்கள் போன்றவை நிறைந்திருக்கின்றன.

தாவரம் சார்ந்த புரதங்கள் பருப்பு, நட்ஸ், விதை வகைகளில் கிடைப்பதுடன் இருதய நோய் பாதிப்பு, டயபிடிஸ், சில புற்றுநோய் பாதிப்பு வகைகளின் ஆபத்துகளையும் தடுக்கின்றன. இதிலும் அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துகள், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவையும் இருக்கின்றன.

எனவே விலங்குகளின் புரதத்தை அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம். தாவரங்களின் புரதத்தை அன்றாடம் எடுத்து கொள்ளலாம். உங்கள் உடலில் புரத சத்துக்களின் தேவையை கணக்கில் வைத்துக்கொண்டு இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்