Andra Mess Parupu Podi : பருப்புப்பொடி சாப்பிட இனி ஆந்திரா மெஸ் செல்லவேண்டாம்! வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி!
Andra Mess Parupu Podi : பருப்புப்பொடி சாப்பிட இனி ஆந்திரா மெஸ் செல்லவேண்டாம். வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி. கட்டாயம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
ஆந்திரா மெஸ்களில் பரிமாரப்படும் இந்த பருப்புப்பொடி அனைவரும் பிடித்த ஒன்று. சூடான சாதத்துடன் இந்த பருப்புப்பொடியை போட்டு பிசைந்து ஆவக்காய் ஊறுகாய் அல்லது ஏதேனும் ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
ஆந்திரா மெஸ் பருப்புப்பொடி செய்ய தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – முக்கால் கப்
கடலை பருப்பு – கால் கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
பொட்டுக்கடலை – கால் கப்
மிளகு – கால் ஸ்பூன்
வர மிளகாய் – 8
பூண்டு – 6 பல்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இந்தப்பொடியை சாதத்துடன் சாப்பிட்டால் இன்னும் வேண்டும் என்று கேட்டு மீண்டும் மீண்டும் சாப்பிடுவீர்கள். சுவை அந்தளவுக்கு அள்ளும்.
செய்முறை
முதலில் வெறும் கடாயை சூடாக்கி தீயை குறைத்து அதில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து வறுக்க வேண்டும். பாதி வறுத்தவுடன், அதில் பொட்டுக்கடலை, மிளகு சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியாக வரமிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகலமான தட்டில் வறுத்த அனைத்தையும் கொட்டி ஆறவைக்கவேண்டும். அதே நேரத்தில் பூண்டை உரித்து தட்டிப்போட்டு வெறும் கடாயில் நன்றாக வாசம் வரும் வரை வறுத்து அதையும் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியவுடன், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பொடி செய்துகொள்ள வேண்டும்.
இந்தப்பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் 3 மாதங்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.
இந்தப்பொடியை சூடான சாதத்தில் சேர்த்து நெய்யுடன் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
உங்களின் கார அளவுக்கு ஏற்ப மிளகாயை சேர்த்துக்கொள்ள வேண்டும். காரம் அதிகம் விரும்புபவர்கள் கூடுதல் மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம். வேண்டுமானால் குறைத்தும் கொள்ளலாம். ஆந்திர மெஸ் பருப்பு பொடி சாப்பிட இனி ஆந்திரா மெஸ் செல்ல வேண்டாம். வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்