Amla Tea : காலையில் இந்த ஒரு தேநீர்! 80 வயதிலும் குறையும் நோய் எதிர்ப்பை மீட்கும்! தினமும் பருகலாம்!-amla tea this is a tea in the morning even at the age of 80 the immune system will recover drink daily - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Tea : காலையில் இந்த ஒரு தேநீர்! 80 வயதிலும் குறையும் நோய் எதிர்ப்பை மீட்கும்! தினமும் பருகலாம்!

Amla Tea : காலையில் இந்த ஒரு தேநீர்! 80 வயதிலும் குறையும் நோய் எதிர்ப்பை மீட்கும்! தினமும் பருகலாம்!

Priyadarshini R HT Tamil
Feb 10, 2024 05:30 PM IST

Amla Tea : காலையில் இந்த ஒரு தேநீர்! 80 வயதிலும் குறையும் நோய் எதிர்ப்பை மீட்கும்! தினமும் பருகலாம்!

Amla Tea : காலையில் இந்த ஒரு தேநீர்! 80 வயதிலும் குறையும் நோய் எதிர்ப்பை மீட்கும்! தினமும் பருகலாம்!
Amla Tea : காலையில் இந்த ஒரு தேநீர்! 80 வயதிலும் குறையும் நோய் எதிர்ப்பை மீட்கும்! தினமும் பருகலாம்!

தேன் – 2 ஸ்பூன்

எலும்மிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவிடவேண்டும். அதில் நெல்லிக்காயை துருவி அதன் விழுதுகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவேண்டும்.

சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்தவிட்டு அதை வடிகட்டி, சூட்டுடன் எலுமிச்சை சாறை கலக்க வேண்டும்.

பின்னர் தேன் கலந்து அதை பருகினால் அந்த நாளே சுறுசுறுப்பாக அமையும்.

(நெல்லிக்காய் இல்லாவிட்டால், நெல்லிக்காய் பொடியை சேர்த்துக்கொள்ளலாம். தேனுக்கு பதில் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை கூட சேர்த்துக்கொள்ளலாம்)

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் நமக்கு வயோதிக காலத்தில் ஏற்படும் இம்யூனோசெனஸ் என்ற மெல்ல மெல்ல குறையும் நோய் எதிர்ப்பாற்றலை மீட்டெடுக்கும் தன்மை கொண்டது.

நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்

வைட்டமின் சி சத்து நிறைந்தது

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.

உடல் வளர்சிதைக்கு உதவுகிறது

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.

நெல்லிச்சாறு மூலம் உங்கள் உடலின் கழிவுகளை நீக்கலாம்

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீங்கள் நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது.

மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது

இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கண்பார்வை மேம்பட உதவுகிறது

இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.