Amla Jam : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜாம்! டிபஃனுக்கு பெஸ்ட்!-amla jam corrects eye defects nutritious gooseberry jam best for tiffen - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Jam : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜாம்! டிபஃனுக்கு பெஸ்ட்!

Amla Jam : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜாம்! டிபஃனுக்கு பெஸ்ட்!

Priyadarshini R HT Tamil
Feb 04, 2024 02:22 PM IST

Amla Jam : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜாம்! டிபஃனுக்கு பெஸ்ட்!

Amla Jam : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜாம்! டிபஃனுக்கு பெஸ்ட்!
Amla Jam : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜாம்! டிபஃனுக்கு பெஸ்ட்!

வெல்லம் – ஒரு கப்

இஞ்சி – ஒரு துண்டு துருவியது

பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காயை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆறயபின் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை ஒரு கடாயில் சேர்த்து வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். ஜாம் பதத்துக்கு நன்றாக இருகிவந்தவுடன், அதில் உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய்ப்பொடி மற்றும் இஞ்சி துருவல் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

அடுப்பை அணைத்து அந்த சூட்டிலே அனைத்தையும் நன்றாக கலந்துவைக்க வேண்டும்.

இதை தோசை, பிரட், சாப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

நெல்லிக்காயின் துவர்ப்பு சுவை சிலருக்கு பிடிக்காது. அவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு.

நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்

வைட்டமின் சி சத்து நிறைந்தது

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.

உடல் வளர்சிதைக்கு உதவுகிறது

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.

நெல்லிச்சாறு மூலம் உங்கள் உடலின் கழிவுகளை நீக்கலாம்

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீங்கள் நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது.

மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது

இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கண்பார்வை மேம்பட உதவுகிறது

இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.