தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Akkaravadisal : நெய் மணக்கும் அக்காரவடிசலை பார்த்தலே நாவினிக்கும், பெருமாள் கோயில் பிரசாதத்தை வீட்டிலே செய்ய முடியும்!

Akkaravadisal : நெய் மணக்கும் அக்காரவடிசலை பார்த்தலே நாவினிக்கும், பெருமாள் கோயில் பிரசாதத்தை வீட்டிலே செய்ய முடியும்!

Priyadarshini R HT Tamil
Jul 19, 2023 10:46 AM IST

Akkaravadisal : பாரம்பரிய உணவுதான் அக்காரவடிசல் என்பது, சர்க்கரை பொங்கலின் வேரியேஷன்தான், ஆனால் சர்க்கரை பொங்கலைவிட ஒரு படி கூடுதல் சுவை. பெருமாள் கோயில்களில் திருவிழாக்களின்போது பிரதான பிரசாதம்.

அக்காரவடிசல்
அக்காரவடிசல்

ட்ரெண்டிங் செய்திகள்

அக்காரவடிசல் செய்ய தேவையான பொருட்கள்

பச்சை அரிசி – அரை கப் (பொன்னி பச்சை அரிசி சிறந்தது)

பாசிபருப்பு – கால் கப்

வெல்லம் – 1 கப் (உங்களின் சுவைக்கு ஏற்ப)

பால் – கப் (தேங்காய் பால் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப)

தண்ணீர் - அரை கப்

நெய் – 10 டேபிள் ஸ்பூன்

முந்திரி – 10

உலர் திராட்சை – 10

ஏலக்காய் – 1 பொடித்தது

பச்சை கற்பூரம் – தேவைப்பட்டால் சேர்க்கலாம்

உப்பு – தேவையான அளவு

அசிரியையும், பாசிப்பருப்பையும் ஒன்றாக அலசி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கெட்டியான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

எஞ்சிய நெய்யில் இந்த அரிசி கலவையை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சிக்கொள்ள வேண்டும். நன்றாக கிரீம் பதம் வரும் வரை பாலை சுண்டக்காய்ச்சிக்கொள்ள வேண்டும். அதில் கலந்து வைத்துள்ள அரிசி, தண்ணீர் சேர்த்து நன்றாக சமைத்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பொடியாக இருந்தால் அப்படியே கூட பயன்படுத்திக்கொள்ளலாம். அது நீங்கள் வழக்கமாக எவ்வாறு பயன்படுத்திக்கொள்வீர்கள் என்பதை பொருத்து செய்துகொள்ளலாம்.

இந்த பாத்திரத்தில் தயாரிகிக்கொண்டிருக்கும் பொங்கலில், பாகு வெல்லத்தை சேர்க்க வேண்டும்.

அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து நெய், ஏலக்காய் பொடி, பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து கலந்து பொங்கலாக்கி இறக்க வேண்டும். நெய் கொஞ்சம் தாராளமாக சேர்க்கலாம். பொங்கலையும், அக்காரவடிசலையும் வேறுபடுத்தி காட்டுவதே அதில் சேர்க்கப்படும் அதிகப்படியான நெய் மற்றும் பால்தான்.

அனைத்தையும் நன்றாக கலந்து, அதில் வறுத்து வைத்திருந்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்க வேண்டும்.

அக்காரவடிசலுக்கு எந்த சைட் டிஷ்சும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

பொங்கல் பண்டிகையின்போது, பிராமின் வீடுகளில் அக்காரவடிசல், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வங்காளபாத், பிசிபேலாபாத் ஆகிய உணவு வகைகளும், அனைத்து காய்கறி கூட்டும் தயார் செய்யப்படும்.

WhatsApp channel

டாபிக்ஸ்