Air Pollution : ஆஸ்துமா மருந்து விற்பனையில் முதலிடம்; காற்று மாசுபாட்டால் நேர்ந்த அவலம் – அதிர்ச்சி ஆய்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Air Pollution : ஆஸ்துமா மருந்து விற்பனையில் முதலிடம்; காற்று மாசுபாட்டால் நேர்ந்த அவலம் – அதிர்ச்சி ஆய்வு!

Air Pollution : ஆஸ்துமா மருந்து விற்பனையில் முதலிடம்; காற்று மாசுபாட்டால் நேர்ந்த அவலம் – அதிர்ச்சி ஆய்வு!

Priyadarshini R HT Tamil
Jan 19, 2024 06:00 AM IST

Air Pollution : ஆஸ்துமா மருந்து விற்பனையில் முதலிடம்; காற்று மாசுபாட்டால் நேர்ந்த அவலம் – அதிர்ச்சி ஆய்வு!

Air Pollution : ஆஸ்துமா மருந்து விற்பனையில் முதலிடம்; காற்று மாசுபாட்டால் நேர்ந்த அவலம் – அதிர்ச்சி ஆய்வு!
Air Pollution : ஆஸ்துமா மருந்து விற்பனையில் முதலிடம்; காற்று மாசுபாட்டால் நேர்ந்த அவலம் – அதிர்ச்சி ஆய்வு!

2014ம் ஆண்டு குழந்தைகள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பில் சென்னை முதலிடத்தையும், டெல்லி இரண்டாம் இடத்தையும் பிடித்ததிலிருந்து சென்னை மற்றும் டெல்லியில் காற்றின் தரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவில் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருந்துச் சந்தையில், கிருமிக்கொல்லி, சர்க்கரை நோய் மருந்துகளை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை ஆஸ்துமா நோய்க்கு பயன்படுத்தப்படும் Foracort மருந்துப்பைகள் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

IQVIA நிறுவனம் மூலம் செய்த ஆய்வில், கடந்த 2 மாதங்களில், சந்தை விற்பனையில் Foracort மருந்தே (Budesonide-200 மைக்ரோகிராம்-(ஸ்டீராய்ட்) மற்றும் Formoterol (மூச்சுக் குழலை விரிவடையச் செய்யும் மருந்து – 6 மைக்ரோகிராம்) முதலிடத்தில் உள்ளது.

பனியும் மற்றும் அதிகரித்து வரும் காற்று மாசுபாடே Foracort விற்பனையை முதலிடத்திற்குத் தள்ளியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் மட்டும் Foracort மருந்து ரூ.85 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இது டிசம்பரில் 22 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023ம் ஆண்டு நவம்பரில் Foracort ரூ.81 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

நிபுணர்கள் இந்த அதிக விற்பனைக்குக் காரணமாக 3 முக்கிய விஷயங்களை பதிவு செய்துள்ளனர்.

அதிகரிக்கும் காற்று மாசுப்பாடு

அதிக பனி (குறிப்பாக வடஇந்தியா)

கொரோனா பாதிப்பால் நுரையீரல்களில் எற்பட்ட பாதிப்பு (Residual damage)

காற்று மாசுப்பாடு அதிகரித்தால் (PM 2.5-10 துகள்கள், ஓசோன், சல்பர் டைஆக்ஸைட், நைட்ரஜன் டைஆக்ஸைட்) ஆஸ்துமா, நுரையீரல் தொற்று அதிகரிப்பதாக ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன (அருள்பிரகாசஜோதி, சந்திரசேகர் மற்றும் குழுவினர் செய்த சென்னை ஆய்வு).

(மஞ்சள் காமாலைக்கு பயன்படுத்தப்படும் Liv-52- சித்தமருந்து டிசம்பர் 2023ல் 36 சதவீத வளர்ச்சியை எட்டி ரூ.62 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது)

2015ல் காற்று மாசுபாடு சென்னையில் அதிகரித்ததால், சென்னையில் ஆஸ்துமா நோயாளிகள் அதிக பாதிப்பிற்கு உள்ளான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Center for Environmental Medicine, Asthma, Lung Biology ஆய்விதழில் காற்று மாசுபாடு காரணமாக ஆஸ்துமா அதிகரிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் 50 சதவீத ஆஸ்துமா நோய்க்கு பரம்பரை காரணிகள் இருந்தாலும், 50 சதவீத நோய் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் அதிகமாகியுள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2023 அக்டோபரில் ராம்லால் வர்மா மற்றும் குழுவினர் செய்த சென்னை ஆய்வில் காற்று மாசுபாடு காரணமாக ஆஸ்துமா அதிகரித்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளனர்.

சுருக்கமாக, டிசம்பர் 2023ல் ஆஸ்துமாவிற்கு பயன்படுத்தப்படும் Foracort மருந்தின் விற்பனை சந்தையில் முதலிடத்தை பிடித்தது இந்தியா மற்றும் தமிழகத்தில் அதிகரித்து வரும் காற்றுமாசுபாட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

தற்போது, இந்தியா 11 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்து (அதன்மூலம் காற்றின் தரம் மேலும் மோசமாகும்) 70 சதவீத மின் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்திய அரசின் மொத்த வரி வருமானம் ரூ. 27 லட்சம் கோடி. இதில் பாதிக்கும் மேலாக புதைபடிம (Fossil fuels) எரிபொருள் செலவிற்கு செல்கிறது எனில் எப்படி காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும்?

காற்று மாசுபாட்டைத் தடுக்க சட்டங்கள் உள்ளது. அதை பின்பிற்ற மக்கள் நலன் காக்கப்படவேண்டும் என மருத்துவர் புகழேந்தி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.