தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Air Pollution : காற்று மாசுபாட்டால் வெளியாகும் நைட்ரேட்டுகள்; பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு ஆபத்து–அதிர்ச்சி ஆய்வு

Air Pollution : காற்று மாசுபாட்டால் வெளியாகும் நைட்ரேட்டுகள்; பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு ஆபத்து–அதிர்ச்சி ஆய்வு

Priyadarshini R HT Tamil
Feb 12, 2024 04:12 PM IST

Air Pollution : காற்று மாசுபாட்டால் வெளியாகும் நைட்ரேட்டுகள்; பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு ஆபத்து–அதிர்ச்சி ஆய்வு

Air Pollution : காற்று மாசுபாட்டால் வெளியாகும் நைட்ரேட்டுகள்; பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு ஆபத்து–அதிர்ச்சி ஆய்வு
Air Pollution : காற்று மாசுபாட்டால் வெளியாகும் நைட்ரேட்டுகள்; பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு ஆபத்து–அதிர்ச்சி ஆய்வு

ட்ரெண்டிங் செய்திகள்

காற்று மாசு குறித்து பல்வேறு ஆய்வுகளும் நமக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ள வேளையில் தற்போது இன்னொரு ஆய்வும் அச்சுறுத்துகிறது. 

காற்று மாசால் வெளியாகும் நைட்ரேட்டு, ஓசோனால் (Oxidants) இரவு நேர பூச்சிகளால் (Hawkmoth) மாலை நேர பூக்களில் நிகழும் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மனிதர்களால் நிகழும் மாசு காரணமாக, பூச்சிகளின் மோப்ப சக்திக்கு பாதிப்பு ஏற்பட்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது தடைபட்டுள்ளது. பூக்களில் நறுமணத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களுக்கு காற்று மாசால் வெளியாகும் நைட்ரேட்டுகள் (Nitrates), ஓசோன் வாயு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது உலக அளவில் குறையத் தொடங்கியுள்ளது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், காற்றுமாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த நைட்ரேட்கள் மனித உடலுக்கு நன்மைகளே கிடைக்கின்றன. அதையும் சமீபத்திய ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. 

சமீபத்திய மற்றொரு ஆய்வில், கீரைகள் அல்லது பசும் இலைகளில் இயற்கையாக இருக்கும் நைட்ரேட்டுகள் (Nitrates) ஈறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு குறைந்த பின்விளைவுகளுடன் தீர்வை அளிக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

கீரைகளில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரிக் ஆக்ஸைடாக உடம்பில் மாற்றம் அடைந்து, அது தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, வாயில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காக்கிறது என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

எனவே, செயற்கை மருந்துகள் மூலம் (Antiseptic Mouthwashes) வாயை சுத்தப்படுத்துவதற்கு பதிலாக கீரைகள் மற்றும் பசும் இலைகளை உட்கொள்வதன் மூலம் ஈறுகளை காக்க முடியும். கர்ப்பிணிகளுக்கு இது கூடுதல் பலன் அளிக்கும்.

இதில் புதினா முக்கிய பங்கு வகிக்கிறது. தினம் ஒரு புதினா இலையை மென்று சாப்பிடலாம் அல்லது காலையில் தண்ணீரை கொதிக்க வைத்து கைப்பிடியளவு புதினா இலைகளை சேர்த்து வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு 2 ஸ்பூன் அல்லது தேன் 2 ஸ்பூன் கலந்து பருகவேண்டும். 

இதனால் நல்ல பலன் கிடைக்கும். இது செய்வதற்கு மிகவும் எளிதான ஒன்று ஆகும். புதினா இலைகள் கிடைக்கவில்லையென்றால், புதினா பொடிகள் கிடைக்கிறது அவற்றை வாங்கி சூப் அல்லது தேநீர் வைத்து அருந்த நல்ல பலன்கள் கிடைக்கும். 

கீரைகளில் சூப் அல்லது கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். தினம் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பதை ஒரு மண்டலம் பின்பற்றலாம். இதுபோல் பல்வேறு வழிகள் கீரையை எடுத்துக்கொள்ள உதவுகின்றன. 

குறிப்பாக முருங்கைக்கீரை பொடிகள் எல்லாம் தற்போது கிடைக்கின்றன. எனவே அவற்றைக்கொண்டு சூப்கள் செய்து பருகலாம். 

இயற்கையை மதித்து, அதை பேணிகாக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் நமது எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையான எதுவுமே கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. எனவே இயற்கையின் முக்கியத்துவம் உணர்ந்து அனைவரும் செயல்படுவது நல்லது. 

நன்றி – மருத்துவர் புகழேந்தி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel