Skin Care: நாள் முழுக்க முகம் பளபளக்க 6 எளிய குறிப்புகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Skin Care: நாள் முழுக்க முகம் பளபளக்க 6 எளிய குறிப்புகள்

Skin Care: நாள் முழுக்க முகம் பளபளக்க 6 எளிய குறிப்புகள்

I Jayachandran HT Tamil
Feb 16, 2023 08:00 AM IST

நாள் முழுக்க முகம் பளபளக்க 6 எளிய குறிப்புகள் பற்றி இங்கு நாம் அறிந்து கொள்வோம்

நாள் முழுக்க முகம் பளபளக்க 6 எளிய குறிப்புகள்
நாள் முழுக்க முகம் பளபளக்க 6 எளிய குறிப்புகள்

முகம் பளபளப்பாக இருக்க மேக்கப் போடுவார்கள். ஆனால் அந்த மேக்கப் கொஞ்ச நேரம் மட்டும்தான் முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். சிறிது நேரம் கழித்து முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால்தான் உங்கள் முகத்தை நிரந்தரமாகப் பளபளப்பாக வைத்திருக்க இந்தக் குறிப்புகளை வழங்குகிறோம்.

மஞ்சள்

மஞ்சளில் ஆக்ஸிஜினேற்ற பண்பு அதிகம் உள்ளது. மஞ்சள் சருமத்தை பளபளபாக்குவது மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

ஒரு கிண்ணத்தில் கால் கப் கடலைமாவு, அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், சிறிதளவு பால், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

தேன்

தேன் முகத்துக்கு ஈரப்பதத்தைத் தரும் மாய்ஸ்சரைசர் போன்றது. முகப்பருக்கள்,, தழும்புகள் மறையவும் உதவிகிறது.

முகத்தை சுத்தமாகக் கழுவிய பின்னர் 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் சிறந்த ஆக்ஸிஜினேற்றியாக விளங்குகிறது. சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இரவு தூங்குவதற்கு முன்பாக ஆலிவ் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும். இந்த துணியை முகத்தில் சிறிது நேரம் வைத்து எடுக்கவும். அதன் பின்னர் மறுபடியும் வெந்நீரில் நனைத்து முகத்தைத் துடைக்கவும். இதுபோல் செய்தால் முகத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு சாறில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த சாறை முகத்தில் பூசினால் முகப்பரு வராமல் தடுக்கிறது.

ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு சாறு சிறிதளவு சேர்த்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

பால்

சருமத்தில் உள்ள டைரோசின் அளவை பால் கட்டுப்படுத்தி முகத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

காய்ச்சாத பசும்பாலை தினமும் முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழையில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்துள்ளன. இதனால் சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. முகப்பரு வராமல் தடுக்கிறது.

கற்றாழையின் தோலை சீவி அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.

இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் நிரந்தரமாகப் பளபளப்பாக இருக்கும். சருமம் இளமையாகக் காட்சி தரும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.