Diabetic care: நாவல்பழம் கொட்டை பொடியை நீங்கள் ஏன் தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்
நாவல்பழம் கொட்டை பொடியை நீங்கள் ஏன் தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து நிபுணர் சூர்யா மாணிக்கவேல், நாவல்பழம் விதைப் பொடியின் பல நன்மைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். நாவல்பழம் விதைகள் ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். நாவல்பழம் நம்பமுடியாத ஆரோக்கியமான, சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பழமாகும், இது கோடைகால சந்தைகளில் நிரம்பி வழிகிறது.
எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை நாவல்பழம் வழங்குகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் இதன் சிறந்த அம்சமாகும். நாவல்பழம் விதைகள் நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு அதிசயங்களைச் செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது.
ஜாமூன் விதை தூளின் நன்மைகளை நன்கு புரிந்துகொள்ள, ஊட்டச்சத்து நிபுணர் சூர்யா மாணிக்கவேல் அதன் பல நன்மைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவை:
1. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைப்பதற்கும், கிளைகோஸைக் குறைப்பதற்கும் நாவல்பழம் விதைகள் மிகுந்த நன்மை பயக்கும். பழத்தின் விதைகளில் ஜம்போலின் மற்றும் ஜாம்போசின் எனப்படும் நொதியில் உள்ள பொருட்கள் ரத்தத்தில் வெளியிடப்படும் சர்க்கரையின் விகிதத்தை தாமதப்படுத்துகின்றன. உடலில் இன்சுலின் சுரப்பு அளவை அதிகரிக்கின்றன. விஞ்ஞான ரீதியாக, இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
2. இது நச்சு நீக்கும் மூலிகையாகும், இது இயற்கையான சிறுநீர் கழித்தல் மற்றும் வியர்வையை பராமரிக்க உதவுகிறது.
3. நாவல்பழம் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்பு காரணமாக, கல்லீரல் ஊக்கியாக செயல்படுகிறது. ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்துக்கு எதிராக போராடுகிறது. கல்லீரல் செல்களை பாதுகாக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது கல்லீரலில் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
4. நாவல்பழம் விதை தூளில் எலாஜிக் அமிலம் எனப்படும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை ரத்த அழுத்தத்தின் விரைவான ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்க உதவும்.
5. நாவல்பழம் விதைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் கலவைகள் போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்க உதவுகின்றன.
டாபிக்ஸ்