Salads: உடல் எடையை குறைக்க உதவும் 5 சாலட்கள் - செய்வது எப்படி?
தேவையற்ற எடையை குறைக்க உதவும் 5 அற்புதமான சாலட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சாலட் என்பது உடற்பயிற்சி செய்யும் ஆர்வலர்களுக்கு ஒரு பிரதான தேர்வாகும். சாலட் என்பது ஊட்டச்சத்துகளைத் தரும் குறைந்த கலோரி கொண்ட உணவாகும்.
பெரும்பாலான சாலட்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானப் பிரச்னைகளுக்கு உதவுகிறது. நல்ல வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, பீட்ரூட் போன்றவற்றால் செய்யப்பட்ட சாலட்டை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
பிரெஞ்ச் சாலட், இங்கிலீஷ் சாலட், சீசர் சாலட், கிரேக்க சாலட் வரை என பல சாலட்கள் உள்ளன.
இந்நிலையில் உடல் எடைக்குறைப்புக்குப் பயன்படும் சாலட்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அனுமிதா பதக் பரிந்துரைக்கும் சாலட்கள் குறித்து காண்போம்.
1.குயினோவா சாலட்:
சந்தையில் குயினோவா என்னும் தாவர விதைகளை வாங்கிக்கொள்ளவும். அவற்றை வைத்து குயினோவா சாலட் தயார் செய்து உண்ண உடல் எடை குறையும்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த குயினோவா பொருட்கள் - 40 கிராம்
மிளகுத்தூள்: 30 கிராம்
எலுமிச்சை சாறு: 1 தேக்கரண்டி
துளசி இலைகள்: 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய்: 1 தேக்கரண்டி
சுரைக்காய்: 1
சுவைக்கேற்ப உப்பு
தயாரிக்கும் முறை
- குயினோவாவிலிருந்து தண்ணீரை வடிகட்டவும்.
- ஒரு சாலட் கிண்ணத்தில் குயினோவாவுடன் அனைத்து காய்கறிகளையும் கலக்கவும்.
- ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் பிற சுவையூட்டல்களை கலக்கவும்.
- தற்போது பரிமாறும் வகையிலான சாலட் தயார்.
2.தாமரை விதைகள் சாலட்:
தேவையான பொருட்கள்
தாமரை விதைகள் வறுக்கப்பட்டவை: 2 கப்,
வெங்காயம்: 1 நறுக்கியது,
தக்காளி: 1 சிறியது,
புதினா இலைகள்: 1 கைப்பிடி,
பச்சை கொத்தமல்லி: 1 தேக்கரண்டி,
நறுக்கிய வெள்ளரிக்காய்: 1 கப்,
புதினா மற்றும் கொத்தமல்லி சட்னி: 3 தேக்கரண்டி,
இஞ்சி பூண்டு பேஸ்ட் : 1 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா: சுவைக்கேற்ப போட்டுக்கொள்ளவும்.
உப்பு:
சுவைக்கேற்ப செய்வது எப்படி?
ஒரு பெரிய பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து புதினா மற்றும் கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
3.முட்டை மற்றும் பசலைக்கீரை சாலட்:
முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகும். மேலும் நீண்ட நேரம் உங்களது வயிறு நிறைந்ததாக உணரச்செய்கின்றன. எனவே கீரையுடன் இருக்கும் இந்த சாலட் இரும்பு மற்றும் கால்சியத்தின் நல்ல கலவையாகும்.
தேவையான பொருட்கள்:
முட்டை (வேகவைத்தது): 2,
கடுகு எண்ணெய்: 1 தேக்கரண்டி,
ரொட்டி துண்டுகள்: அரை கப்,
தக்காளி (நறுக்கியது): 1,
துளசி இலைகள்: 6 முதல் 8,
பசலைக்கீரை இலைகள் (பொடியாக நறுக்கியது): 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு
தயாரிக்கும் முறை:
வறுத்த முட்டைகளை எடுத்துக்கொள்ளவும். அதில் கீரை தவிர அனைத்து காய்கறிகளையும் கலக்கிக்கொள்ளவும். இந்த கலவை ஆறியதும், அதில் கீரை மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்தால் சாலட் தயார்.
4.பீன்ஸ் சாலட்:
இந்த சாலட் பெண்களின் எடை குறைப்பு பயணத்திற்கு முக்கிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
சோயா பனீர் கட்டிகள் (வேகவைத்தது): 100 கிராம்
சோயா சாஸ்: 1 தேக்கரண்டி
எள் விழுது: 2 தேக்கரண்டி.
தண்ணீர் : 2 டேபிள்ஸ்பூன்.
சின்ன வெங்காயம் (நறுக்கியது): 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் (நறுக்கியது): 1 நடுத்தர அளவு
தக்காளி (நறுக்கியது): 1/2 கப்
பீன்ஸ் (நறுக்கியது): 4 முதல் 5
வெள்ளை பீன்ஸ் (வேகவைத்தது): 2 தேக்கரண்டி.
உப்பு - தேவையானது
தயாரிக்கும் முறை:
ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த சோயா பனீர் கட்டிகள் சேர்த்து சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். 15 நிமிடங்கள் வேக வைக்கவும். பின், ஆற வைக்கவும்.
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து, அனைத்து சுவையூட்டிகளுடன் உங்கள் சாலட்டை தயார் செய்யவும்.
5.சிக்கன் சாலட் :
தேவையான பொருட்கள்
வேகவைத்த சிக்கன்: 2 கப்
குடைமிளகாய் (நறுக்கியது): அரை கப்
ஸ்பிரிங் வெங்காயம் (பொடியாக நறுக்கியது): 1
ஆலிவ் (தோராயமாக நறுக்கியது): 6 முதல் 7
வெங்காயம் (நறுக்கியது): 1 நடுத்தர அளவு
ஆப்பிள் (நறுக்கியது): 1
கீரை (நறுக்கியது): 1
மயோனைஸ்: 2 டேபிள்ஸ்பூன்.
எலுமிச்சை சாறு : 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையானது.
தயாரிக்கும் முறை:
மயோனைஸ், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைப்போட்டு நன்கு கலக்கவும். கீரை இலைகளுடன் நறுக்கிய இதனுடன் அனைத்து காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின், சிக்கன் சாலட்டைப் பரிமாறவும்.
எடை இழப்புக்கு மட்டுமல்லாமல், சாலட்கள் உங்கள் தோல், முடி, நிறமி, மகப்பேற்றுக்கு பிறகான எடை இழப்பு என உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சாலட்டுகள் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சக்திவாய்ந்த மூலமாகும். இவை தயாரிக்க எளிதானவை அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் கருத்தில் கொண்டு உங்கள் உணவில் அதிக வகையான சாலட்களை சேர்த்துக்கொள்வது நன்மை அளிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்