தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Crime : Fire Accident In Cuddalore And Four Died

Crime : கடலூரில் பயங்கரம்: குழந்தை உள்ளிட்ட 4 பேர் தீ வைத்து கொலை பின்னணி என்ன?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 08, 2023 01:29 PM IST

சத்குரு தனலட்சுமியை பழிவாங்கும் நோக்கில் தான் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தனலட்சுமி மீது ஊற்ற தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியில் தமிழரசி என்ற பெண் தன் கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். தமிழரசியின் சகோதரி தனலட்சுமிக்கும் அவரது கணவர் சத்குருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனலட்சுமி அவரது கணவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே தனலட்சுமி சத்குருவை பிரிந்து தனது சகோதரி தமிழரசியின் வீட்டில் வசித்து வந்நதார். இந்நிலையில் இன்று கோபத்துடன் தமிழரசி வீட்டிற்கு சத்குரு வந்துள்ளார். 

அப்போது சத்குரு தனலட்சுமியை பழிவாங்கும் நோக்கில் தான் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தனலட்சுமி மீது ஊற்ற தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அதை தடுக்க வந்த தமிழரசி மற்றும் அவரது குழந்தை ஹாசினி , தனலட்சுமி மீது பெட்ரோலை ஊற்றி உள்ளார். அப்போது சத்குரு மீது பெட்ரோல் பட்டுள்ளது. இதையத்து தீ வைத்ததில் தமிழரசி அவரது குழந்தை ஹாசினி மற்றும் தனலட்சுமியின் 4 மாத கை குழந்தை மற்றும் சத்குரு ஆகியோர் உயிரிழந்தனர்.

இதில் அங்கிருந்த தனலட்சுமியின் தாய் மற்றும் தனலெட்சுமி இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 50 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சத்குரு வந்த போது பெட்ரோல் கேனுடன் வந்தார். ஆனால் அவர் தீ வைத்து கொலை செய்ய தான் வந்தாரா என்று தெரிய வில்லை கடுங்கோபத்துடன் பெட்ரோல் கேனுடன் வந்தார் என்று இன்று காலை சத்குருவை பார்த்த அப்பகுதி மக்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரிடமும் வாக்குமூலம் வாங்கி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் கடலூர் சுற்று வட்டார பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்