Karthigai deepam: ‘மீண்டும் தாலியை திருடிய ரம்யா.. திட்டம் போட்டு காலை வாரிய கார்த்திக்’- கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil serial karthigai deepam today august 9 2024 episode update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘மீண்டும் தாலியை திருடிய ரம்யா.. திட்டம் போட்டு காலை வாரிய கார்த்திக்’- கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: ‘மீண்டும் தாலியை திருடிய ரம்யா.. திட்டம் போட்டு காலை வாரிய கார்த்திக்’- கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 09, 2024 03:50 PM IST

Karthigai deepam: அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க. நான் தாலியை கண்டு பிடித்து கொண்டு வருகிறேன் என்று சொல்ல, ரம்யா எப்படி கண்டு பிடிக்க போறீங்க என்று கேட்கிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: ‘மீண்டும் தாலியை திருடிய ரம்யா.. திட்டம் போட்டு காலை வாரிய கார்த்திக்’- கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: ‘மீண்டும் தாலியை திருடிய ரம்யா.. திட்டம் போட்டு காலை வாரிய கார்த்திக்’- கார்த்திகை தீபம் அப்டேட்!

நேற்று கார்த்திகை தீபம் சீரியலில் நடந்தது என்ன? 

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், அபிராமி தாலியுடன் பெண் சாமியாரை பார்க்க வந்திருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இன்று  கார்த்திகை தீபம் சீரியலில் நடந்தது என்ன?

அதாவது, அபிராமியை பின்தொடர்ந்து வந்த ரம்யா, இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். அதன் காரணமாக வைத்து, அபிராமியின் பேக்கை அவள் திருடி விடுகிறாள். பேக் காணாமல் போனதை தெரிந்து, அபிராமி அதிர்ச்சி அடைகிறாள். அதன் பிறகு கார்த்திக்கு போன் செய்து, தாலி காணாமல் போன விஷயத்தை சொல்லி, எப்படியாவது கண்டுபிடித்து கொடு என்று சொல்கிறாள். இதையடுத்து கார்த்திக் கோயிலுக்கு வருகிறான். அங்கு ரம்யா இருப்பதை பார்த்ததும் கார்த்திக்கிற்கு ரம்யா மீது சந்தேகம் வந்து விட்டது. 

கார்த்திக், மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து கண்டு பிடித்து விடுவார்கள் என்று சொல்ல, ரம்யா அதிர்ச்சி அடைகிறாள்.

இதனையடுத்து, உடனடியாக ஒரு திட்டத்தை போடுகிறான். அதன்படி, ரம்யாவிடம் நீங்க எங்கேயும் போகாமல் அம்மாவுடன் இங்கேயே இருங்கள். அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க. நான் தாலியை கண்டு பிடித்து கொண்டு வருகிறேன் என்று சொல்ல, ரம்யா எப்படி கண்டு பிடிக்க போறீங்க என்று கேட்கிறாள். உடனே கார்த்திக், அந்த பேக்கில் தாலி மட்டும் இல்ல, அம்மாவோட போனும் இருக்கு, போலீசில் சொன்னால், மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து கண்டு பிடித்து விடுவார்கள் என்று சொல்ல, ரம்யா அதிர்ச்சி அடைகிறாள்.

ரவுடியிடம் இருந்து நாலு பேர் பேக்கை பிடுங்கி வைத்திருந்ததாக சொன்ன ரம்யா 

இந்த நிலையில், கார்த்திக் கிளம்பி போனதும், அபிராமியிடம் தண்ணீர் வாங்கி வருவதாக சொல்லிய ரம்யா, வேகவேகமாக வீட்டிற்கு சென்று அந்த பையை கொண்டு வருகிறாள். ஆனால் அபிராமியிடம் அதனை கொடுக்கும் போது, ரவுடியிடம் இருந்து நாலு பேர் பேக்கை பிடுங்கி வைத்து வெளியில் பேசிக்கொண்டு இருந்ததாக சொல்லி கொடுக்க, உண்மை தெரியாத அபிராமி சந்தோசப்படுகிறாள்.

ஹனிமூன் பற்றி கடுப்பாக்கிய ரம்யா கணவன் ரமேஷ் 

பிறகு கார்த்திக்கு விஷயம் தெரிய, அவனும் அமைதியாகி விடுகிறான். ரம்யா வீட்டிற்கு வந்ததும், மாப்பிள்ளை ரமேஷ் ஹனிமூன் செல்வது குறித்து பேசி கடுப்பாக்குகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.