தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deepam Latest Today Update

Karthigai deepam: அபிராமி கொடுத்த டாஸ்க்.. தீபாவை சிக்க வைக்க ஐஸ்வர்யா செய்த சதி - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 02, 2024 05:14 PM IST

அபிராமி கொடுத்த டாஸ்க்.. தீபாவை சிக்க வைக்க ஐஸ்வர்யா செய்த சதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் அப்டேட்!

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

தீபா கார்த்திக்கிடம், என்னுடன் டைம் ஸ்பென்ட் செய்ய சொல்லி சொல்ல, கார்த்தியும் அவளுடன் வெளியே செல்ல முடிவெடுக்கிறான். 

அபிராமியிடம் விஷயத்தை சொல்ல, அவள் கல்யாண பெண்ணுக்கு புடவை எடுக்கணும் என்று சொல்லி, 1 லட்சம் ருபாய் கொடுத்து அனுப்புகிறாள்.  மேலும் மாலை கோயிலில் விளக்கு போடணும். போனை கையிலையே வச்சிக்க எனவும் சொல்லி அனுப்புகிறாள். 

இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா, யாருக்கும் தெரியாமல் தீபாவின் போனை எடுத்து விடுகிறாள். பிறகு ஐஸ்வர்யா அருணை வலுக்கட்டாயமாக ஓரிடத்திற்கு அழைத்து வர, அவன் இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த என்று கேட்கிறான். 

இதனையடுத்து நீங்க வாங்கணும்னு ஆசைப்பட்ட ரெசார்ட்டை நான் வாங்கிட்டேன். அதை உங்க பேருக்கு மாற்றி கொடுக்க தான் வர சொன்னதாக சொல்கிறாள். 

அருண் உனக்கு ஏது இவ்வளவு பணம் என கேட்க, எங்களுடைய சொத்துக்களை விற்று இதை வாங்கியதாக சொல்கிறாள். வீட்ல உங்களுடைய ஆசையை புரிஞ்சிக்கல. இப்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். முதலில் நீங்க ரிசார்ட்டை ரெடி பண்ணி வேலையை தொடங்குங்க. அப்புறம் வீட்டில் சொல்லிக்கலாம் என மண்டையை கழுவ, அவனும் சம்மதம் சொல்லி, கையெழுத்து போட்டு,தனது பெயருக்கு ரிசார்ட்டை மாற்றி கொள்கிறான்.

இங்கே கார்த்திக் தீபா புடவை எடுக்க கடைக்கு வர, தீபா எல்லா புடவையையும் எடுத்து போட்டு பார்த்து கொண்டிருக்கிறாள். அதை பார்த்த கார்த்திக், ஏன் இப்படி என கேட்க, அத்தை முதல் முறையா என்கிட்ட பொறுப்பை கொடுத்திருக்காங்க.

அதனால் நல்லபடியாக செய்து முடிக்கணும் என சொல்கிறாள். மேலும் கார்த்திக்காக பேண்ட் ஷர்ட் எடுக்க போவதாகவும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.