Karthigai deepam: தீபா சைக்கோவாக மாரியது ஏன்?.. அதிர்ச்சியின் உச்சத்தில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: கார்த்திக், தீபா குடித்த ஜூஸை லேப் டெஸ்ட்க்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதன் ரிசல்ட் குறித்து விசாரிக்க வந்திருந்தான். - கார்த்திகை தீபம் அப்டேட்

ஜூஸில் கலக்கப்பட்டது என்ன? கார்த்திக்கு தெரிய வரும் உண்மை - ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா கார்த்திக்கிடம் பிசினஸ் விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்
தீபாவிற்காக கோயிலுக்கு சேலை வாங்க வந்த அபிராமி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
ரம்யா கார்த்திக்கை பெங்களூருக்கு தன்னுடன் வரக் கேட்டிருந்த நிலையில், அவனும் சம்மதம் தெரிவிக்கிறான். இதற்கிடையே தீபாவுக்கு அடுத்தடுத்து நடக்கும் மோசமான விஷயங்களை தடை செய்ய அபிராமியும், மீனாட்சியும் கோயிலுக்கு வந்தனர். அங்கு அவளுக்கு பதிலாக விளக்கு போட்டு, ஏலம் விடப்படும் அம்மன் புடவையை வாங்கிச் செல்ல முடிவு செய்தனர். தீபாவுக்காக பரிகாரத்தை நான் செய்யலாமா என்று அபிராமி கேட்க, அவளுடைய புருஷன் கார்த்திக் தான் செய்யணும் என்று சொல்லப்படுகிறது.