Karthigai Deepam: ‘கல்யாணத்தை நிறுத்த நடக்கும் சதி.. அலறும் ஆனந்த்.. அசால்ட் காட்டும் அபி!’ - கார்த்திகை தீபம் எபிசோட்!-zee tamil serial karthigai deepam latest today episode august 26 2024 update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘கல்யாணத்தை நிறுத்த நடக்கும் சதி.. அலறும் ஆனந்த்.. அசால்ட் காட்டும் அபி!’ - கார்த்திகை தீபம் எபிசோட்!

Karthigai Deepam: ‘கல்யாணத்தை நிறுத்த நடக்கும் சதி.. அலறும் ஆனந்த்.. அசால்ட் காட்டும் அபி!’ - கார்த்திகை தீபம் எபிசோட்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 26, 2024 03:19 PM IST

Karthigai deepam: கார்த்திக், தீபா கல்யாணத்தை நிறுத்த கிளம்பிய ஆனந்த்.. அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபம் எபிசோட்!

Karthigai Deepam: ‘கல்யாணத்தை நிறுத்த நடக்கும் சதி.. அலறும் ஆனந்த்.. அசால்ட் காட்டும் அபி!’ - கார்த்திகை தீபம் எபிசோட்!
Karthigai Deepam: ‘கல்யாணத்தை நிறுத்த நடக்கும் சதி.. அலறும் ஆனந்த்.. அசால்ட் காட்டும் அபி!’ - கார்த்திகை தீபம் எபிசோட்!

கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மண்டபத்திற்கு வந்த ஜோசியர் தீபாவுக்கு கல்யாணம் ஏற்பாடா ஒரு உசுர பணயம் வச்சு இந்த கல்யாணம் நடக்கணுமா? என்று கேள்வி எழுப்பிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

 

அதாவது, ஜானகி மற்றும் தர்மலிங்கம் என இருவரும் ஜோசியரிடம், நாங்கள் இந்த விஷயத்தை ஏற்கனவே சம்பந்தி அம்மா கிட்ட பேசிட்டோம்..அவங்க கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கணும் என்று ஆசைப்படுறாங்க. அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு நம்புறாங்க. என்ன காப்பாத்துறதுக்காக தாலியை கழட்டிய தீபா கழுத்துல தாலி ஏறணும், அத நான் பார்க்கணும்னு என்று சொல்றாங்க என்று கூறினர்.

கல்யாணத்தை நிறுத்த திட்டம்

பிறகு ஜோசியர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல, இவர்கள் பேசிய அனைத்தையும் ஆனந்த் கேட்டு விட்டான் என்பது தெரிய வருகிறது. பிறகு அம்மாவோட உயிருக்கு ஆபத்தா இந்த கல்யாணத்தை நான் நடக்க விட மாட்டேன் என்று சொல்லி அபிராமியிடம் வந்து விஷயத்தை சொல்கிறான். இதைக்கேட்ட அபிராமி எனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்கிறாள்.

பிறகு ஆனந்த் கார்த்தியிடம் விஷயத்தை சொல்லப் போவதாக சொல்ல, அபிராமி அவனை தடுத்து நிறுத்துகிறாள். மறுபக்கம் குடோனில கட்டப்பட்டிருக்கும் தீபா ரவுடிகளிடம் ரெஸ்ட் ரூம் போகணும் என்று சொல்ல, அதில் ஒருவன் பாவப்பட்டு கட்டை அவிழ்த்து விடுகிறான். இதையடுத்து தீபா அங்கிருந்து தப்பித்து வெளியே வருகிறாள்.

தீபா மீது எழுந்த சந்தேகம்

இங்கே தர்மலிங்கம் மற்றும் ஜானகி ஆகியோர் தீபாவிடம் உண்மையை சொல்லிவிட முடிவெடுக்கின்றனர். பிறகு தீபாவை சந்தித்து, இந்த கல்யாணம் நடந்தால் அபிராமி உயிருக்கு ஆபத்து என்று சொன்னதும், தீபா வேடத்தில் இருக்கும் ரியா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும். நீங்க உங்கள பத்தி மட்டும் யோசிங்க என்று சொல்ல, தர்மலிங்கம் ஜானகிக்கு தீபா இப்படி சொல்ல மாட்டாளே என்று சந்தேகம் எழுகிறது.

இதற்கிடையே குடோனில் இருந்து தப்பித்த தீபா, ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பித்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.