Karthigai Deepam: ‘காதலை சொன்ன கார்த்திக்.. கட்டியணைத்து கண்ணீர் விட்ட தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil serial karthigai deepam latest today august 22 2024 episode update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘காதலை சொன்ன கார்த்திக்.. கட்டியணைத்து கண்ணீர் விட்ட தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘காதலை சொன்ன கார்த்திக்.. கட்டியணைத்து கண்ணீர் விட்ட தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 22, 2024 12:20 PM IST

Karthigai Deepam: மோதிரம் உருண்டு ரோட்டுக்கு ஓட, தீபா வண்டி வருவது கூட தெரியாமல் பதறிக்கொண்டு ஓடிக்கொண்டே இருந்தாள். இதைப்பார்த்த கார்த்திக், அவளை காப்பாற்றி, மோதிரம் தானே போனால் போகுது, அதுக்கு எதுக்கு இப்படி… என திட்டுகிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘காதலை சொன்ன கார்த்திக்.. கட்டியணைத்து கண்ணீர் விட்ட தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘காதலை சொன்ன கார்த்திக்.. கட்டியணைத்து கண்ணீர் விட்ட தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அம்பிகா, கார்த்திக் தீபா இடையே இருக்கும் விரிசல் குறித்து அறிந்த நிலையில்,இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

உயிரை பணய வைத்த தீபா

தீபா ரெடியாகி கீழே வரும் போது, கார்த்திக் அவளது கையில் போட்டு விட்ட மோதிரம் கழண்டு விழுந்து உருண்டு ஓடியது. தீபா அதை எடுப்பதற்காக பின்னாடியே ஓடினாள். மோதிரம் உருண்டு ரோட்டுக்கு ஓட, தீபா வண்டி வருவது கூட தெரியாமல் பதறிக்கொண்டு ஓடிக்கொண்டே இருந்தாள். இதைப்பார்த்த கார்த்திக், அவளை காப்பாற்றி, மோதிரம் தானே போனால் போகுது, அதுக்கு எதுக்கு இப்படி… என திட்டுகிறான்.

இதையெல்லாம் பார்த்த அம்பிகா, இவங்க விரிசல் சரியாக, இதுவே போதுமே என்று நினைக்கிறாள். அதற்கேற்றார் போல மீனாட்சி, கார்த்தியிடம் சென்று தீபா உங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கானு உங்களுக்கே நல்லா தெரியும், அப்படி இருக்கும் போது நீங்க ஏன் உங்க மனசுல இருக்குற காதலை சொல்ல மாட்டுறீங்க என்று கேள்வி கேட்கிறாள்.

தீபாவை பிடிக்காதா?

மேலும், உங்களுக்கு தீபாவை பிடிக்காதா என்று கேட்க கார்த்திக் அப்படியெல்லாம் இல்ல, எனக்கும் தீபாவை பிடிக்கும் என்று சொல்கிறான். தொடர்ந்து, நானே அவளிடம் காதலை சொல்கிறேன் என்று சொல்ல, இதை அந்த பக்கமாக வந்த அம்பிகாவும் கேட்டு சந்தோசப்படுகிறாள்.

மறுபக்கம் ரியா, ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு காவலுக்கு இரண்டு போலீசும் இருக்க, அப்போது ஒருவன் டீ கொண்டு வந்து கொடுக்க, அதை குடித்ததும் இருவரும் மயங்கி விழுகின்றனர். அதன் பிறகு அந்த வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் ரம்யா, அங்கிருந்து ரியாவை காப்பாற்றி அழைத்துச் செல்கிறாள்.

இங்கே மண்டபத்தில் கார்த்திக், தீபாவிடம் தனது காதலை சொல்கிறான். இதைக்கேட்ட தீபா கார்த்திக்கை காதலுடன் கட்டியணைத்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய, கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

கல்யாண மண்டபத்தில் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தனர். பிறகு எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து, பாட்டு போட்டு போட்டியை நடத்தினர். அருண், ஆனந்த், மீனாட்சி, தர்மலிங்கம் என ஒவ்வொருத்தராக தங்களது துணையை பற்றி பேசினர்.

இறுதியாக தீபா கார்த்தி குறித்து பேச வேண்டிய சூழல் உருவானது. அப்போது கார்த்திக்கை பற்றியும், தனது மனதில் இருக்கும் காதலை பற்றியும் தீபா பேசினாள். தீபா பேசுவதை கேட்ட அம்பிகாவுக்கு கார்த்திக், தீபா இடையே ஏதோ விரிசல் இருப்பது தெரிந்தது. இதனால், மீனாட்சியிடம் இது குறித்து பேச, அவள் தீபா கார்த்திக்கிடம் விட்ட சவால் குறித்து சொன்னாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.