Seetharaman: வேறு வழியில்லாமல் வழிக்கு வந்த மகா; நக்கலடித்த சீதா அடடே சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetharaman: வேறு வழியில்லாமல் வழிக்கு வந்த மகா; நக்கலடித்த சீதா அடடே சம்பவம்!

Seetharaman: வேறு வழியில்லாமல் வழிக்கு வந்த மகா; நக்கலடித்த சீதா அடடே சம்பவம்!

Kalyani Pandiyan S HT Tamil
May 13, 2023 02:15 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

seetharaman
seetharaman

அதன் பிறகு ராம் ரூமுக்கு வர, சீதா கவலைப்படாதீங்க பாஸ்... உங்களுக்காக நான் கஞ்சி எடுத்து வைத்திருக்கேன் என சொல்லி கஞ்சியையும் ஊறுகாயையும் கொடுக்கிறாள். அதை சாப்பிடும் ராம் சிம்பிளாக இருந்தாலும் நல்ல டேஸ்ட்டாக இருக்கு என சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என் கேட்க இதோ கொண்டு வரேன் பாஸ் என சீதா கீழே வருகிறாள்.

வசமாக மாட்டிய மகாலட்சுமி!
வசமாக மாட்டிய மகாலட்சுமி!

கீழே வந்து பார்க்கும் போது மகா உட்பட எல்லாரும் அந்த கஞ்சியை மறைந்து மறைந்து சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்த சீதா அவர்களை நக்கல் அடிக்கிறாள். பிறகு பாஸ் நல்லா இருக்குனு இன்னும் கொஞ்சம் கேட்டாரு, அதான் வந்தேன்.

பரவால்ல நீங்க சாப்பிடுங்க, நான் அவர்கிட்ட சொல்லுறேன் என மேலே வந்து விசயத்தை சொல்ல ராம் எனக்கு பசி இல்ல நல்லா இருக்கவே கேட்டேன் என்று கூறினான். தொடர்ந்து சீதா நான் சமைத்து தரவா என கேட்க ராம் வேண்டாம் என சொல்கிறான்.

மறுநாள் காலையில் சூர்யாவை சந்திக்கும் சீதா, மகாலட்சுமி நல்லவள் இல்லை என சொல்ல சூர்யா நீ உங்க அப்பா பேச்சை கேட்டுட்டு வந்து பேசுற, மகா தான் எங்களை சேர்த்து வைச்சது என கோபப்படுகிறான். இதைகேட்ட சீதா என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறாள். 

மேலும் நீங்க வீட்டிற்கு வந்து ரிஷப்சன் போட்டோக்களை பாருங்க என சொல்ல சூர்யா அதனால தான் நாங்க பிரிந்தோம் என சொல்கிறான். 

சீதா மகாவின் முகத்திரையை கிழிக்க சூர்யாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.