Seetharaman: கொந்தளித்த மகா.. அமைதியாக சென்ற ராம்;ஆறுதல் சொன்ன சீதா.. பரபரக்கும் சீதாராமன் சீரியல்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலில் சீதாவும் மீராவும் சூர்யாவை சந்திக்கச் சென்ற நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஏற்கனவே சுபாஷும் சேதுவும் சூர்யாவை பார்க்க வந்திருந்த நிலையில், சீதா சூர்யாவிடம் பேசி கொண்டிருக்கும் போது சீதாவின் பையில் கஞ்சாவை வைத்து சூர்யாவின் வீட்டில் வைத்து விடுகின்றனர்.
மறுபக்கம் மதுமிதா அவளது அப்பா ராஜசேகர் வீட்டிற்கு வருகிறாள். அவர் மதுவை பார்த்ததும்... இவை கடைசியா இங்க தான் வருவான்னு சொன்னேன்ல, வந்துட்டா பாரு’ என கோபப்படுகிறார்.
அதற்கு மதுமிதா நான் ஒன்னும் இங்க தங்க வரல, என்னுடைய சர்டிபிகேட் வேணும்.. என சொல்லி சண்டையிட்டு உள்ளே வந்து தனது சான்றிதழ்களை எடுத்து கொண்டு சூர்யாவுடன் சென்னைக்கு போகும் விசயத்தை அம்மா உமாவிடம் சொல்லி விட்டு கிளம்புகிறாள். அடுத்ததாக வீட்டுக்கு வந்த சீதா, ராமை போலீஸ் ட்ரெஸ்ஸில் எடுத்த போட்டோவை ஃப்ரேம் போட்டு வீட்டில் மாட்டி வைக்கிறாள்.
ராம் இதைப் பார்த்து சந்தோஷம் அடைகிறான். இந்த சமயத்தில் ராமின் தங்கைகள் மகாவிடம் இந்த விஷயத்தை சொல்ல கோபமாக வந்த அவள், நான் தான் ஐபிஎஸ் ஆசை எல்லாம் வேண்டாம்னு சொன்னேன்ல, நீ ஒழுங்கா நம்ப கம்பெனியை பார்த்துக்கிட்டா போதும் என கோபப்படுகிறாள்.
மேலும் இந்த போட்டோவை கழட்டி எடுத்துட்டு போ என சொல்ல.. சூர்யா மறுத்து பேச முடியாமல் போட்டோவை எடுத்து கொண்டு செல்கிறான். சீதா மகாவிடம் அவருடைய ஆசையை நான் நிறைவேற்றுவேன் என சவால் விட மகாவோ போட்டோவை கழட்ட சொன்னதுக்கே எதுவும் பேசாம போனான் பார்த்த தானே என பதிலடி கொடுக்கிறாள்.
பிறகு ராம் ரூமில் சோகமாக உட்கார்ந்து இருக்க, சீதா அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள். மறுபக்கம் மகா நான் எதையெல்லாம் வேண்டாம்னு சொல்றனோ அதையெல்லாம் சீதா செய்து ராமை தன் பக்கம் இழுக்க பார்க்கிறாள் என தனது டீமுடன் பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
டாபிக்ஸ்