Seetha Raman: மருத்துவமனையில் மதுமிதா;அதிர்ச்சியின் உச்சத்தில் சீதா; அங்கும் நடக்கும் பழிதீர்ப்பு.. சீதாராமன் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட மதுமிதா மயங்கி விழுவதை வீடியோ காலில் ராமும் சீதாவும் பார்த்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீட்டுக்கு வரும் ராமும் சீதாவும் மதுமிதாவை காரில் ஏற்றி கொண்டு ஹாஸ்ப்பிடலில் அட்மிட் செய்கின்றனர்.
மதுவை பரிசோதனை செய்த டாக்டர் ஒன்னு ரெண்டு இல்ல கிட்டத்தட்ட 100 மாத்திரை சாப்பிட்டு இருக்காங்க, அதனால் மதுவை காப்பாற்றுவது கஷ்டம் தான் என்று சொல்ல சீதா அதிர்ச்சி அடைகிறாள்.
இதனையடுத்து ஹாஸ்பிடலுக்கு அர்ச்சனா, சுபாஷ் மற்றும் சேது ஆகியோர் வர அவர்களை சீதா தடுத்து நிறுத்தி, நீங்க உள்ள போக கூடாது என சத்தம் போடுகிறாள்.
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் உள்ளே போக முயற்சி செய்கின்றனர். இதனால் சீதா கையில் கிடைக்கும் பொருளை எடுத்து காளியாக மாறி உங்களை இங்கேயே கொன்னுடுவேன் என மிரட்ட அவர்கள் வேறு வழியாக டாக்டரை சென்று சந்திக்கின்றனர்.
மதுமிதா எங்க வீட்டு மருமகள், எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்ல, அவளை காப்பாத்துங்க என்று சொல்லி டாக்டரிடம் பேசி விட்டு வெளியே வந்து சீதாவை சந்தித்து நாங்க டாக்டரை பார்த்து பேசிட்டோம், இனிமே நீ தான் உள்ள போக முடியாது என ஷாக் கொடுக்கிறார்கள். இதைக்கேட்டு கொதித்த சீதா அவர்களிடம் சத்தம் போட டாக்டர் வெளியே வந்து இது ஹாஸ்பிடல் என திட்டுகிறார்.
அதன் பிறகு ராமும் சீதாவை திட்ட சீதா எதுவும் செய்ய முடியாமல் அமைதியாகிறாள்; அதன் பிறகு ஒரு வழியாக மதுமிதா உயிர் பிழைக்க சீதாவை தவிர எல்லாரும் அவளை சந்திக்கச் செல்கின்றனர். அப்போது அவள் சீதா பற்றி கேட்க அவள் வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதாக சொல்கின்றனர். மேலும் ராம் தான் உன்னை காப்பாற்றியதாக ஓவர் பில்ட்டப் கொடுக்கின்றனர். இதையடுத்து சீதா மதுமிதாவை பார்க்க போக டாக்டர் உங்களை உள்ளே விட கூடாதுனு சொல்லி இருப்பதாக தடுத்து நிறுத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
டாபிக்ஸ்