Saregamapa: சரிகமபவில் இந்த வார ஸ்பெஷல் என்ன தெரியுமா?
சரிகமப நிகழ்ச்சியில் இந்த வார ஸ்பெஷல் என்ன தெரியுமா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப.
மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு சுற்றின் மூலமாகவும் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் பக்தி பாடல்கள் ரவுண்ட் நடைபெற்ற நிலையில் இந்த நிலையில் ஹீரோ , ஹீரோயின் ரவுண்ட் நடைபெற உள்ளது. வரும் ஞாயிறு முதல் இந்த ரவுண்ட் தொடங்க உள்ளது.
போட்டியாளர்கள் ஒவ்வொரும் ஹீரோ, ஹீரோயின்கள் சார்ந்த பாடல்களை தேர்ந்தெடுத்து பாட உள்ளனர். மேலும் இந்த வார சரிகமப நிகழ்ச்சிக்கு பாடகராக பயணத்தை தொடங்கி இன்று இசையமைப்பாளராக வளர்ந்து நிற்கும் கிரிஷ் மற்றும் பாடகி மஹதி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
டாபிக்ஸ்