ஒரு ஊர்ல ரெண்டு ராஜா! சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பட நடிகர் அசோக் குமார்!
தற்போது ஜி தமிழில் புதிய சீரியல் ஒன்று குறித்தான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மௌனம் பேசியதே எனப் பெயரிடப்பட்ட இந்த சீரியலில் திரைப்பட நடிகர் அசோக் குமார் முதன்மையான ரோலில் நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளித்திரையில் வாய்ப்பு குறையும் நடிகர்கள் சின்னத்திரையில், சீரியல்களில் நடிப்பது வழக்கமாக இருந்தது. பெரிய இயக்குனர்களும் டிவிகளில் தொடர்களை இயக்கவும் செய்தனர். அந்த நிலை மாறி தற்போது சின்னத்திரையில் நடித்த நடிகர்கள் பெரிய ஹீரோக்களாக வெள்ளித்திரையில் வலம் வருகின்றனர். ரியாலிட்டி ஷோக்களில் வந்த சிவ கார்த்திகேயன் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக உள்ளார். இது போன்றே பல நடிகர்கள் உள்ளனர்.
இருப்பினும் வெள்ளித்திரையில் சரியாக ஜொலிக்காத நடிகர்கள் சீரியலில் நடிக்க ஆரம்பித்ததும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். விஜய் டிவியின் ராஜா ராணி மூலம் டெலிவிஷனுக்கு அறிமுகமாகி தற்போது சன் டிவியின் கயல் சீரியல் வரை நடிகர் சஞ்சீவ் சின்னத்திரையை கலக்கி வருகிறார். இவரைப் போல பல நடிகர்களை உதாரணமாக கூறலாம்.
ஜீ தமிழில் புதிய சீரியல்
விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களே எல்லா வாரங்களிலும் டி. ஆர்.பி யில் முதன்மையான இடத்தில் உள்ளன. இந்த வரிசையில் தற்போது ஜி தமிழில் புதிய சீரியல் ஒன்று குறித்தான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மௌனம் பேசியதே எனப் பெயரிடப்பட்ட இந்த சீரியலில் திரைப்பட நடிகர் அசோக் குமார் முதன்மையான ரோலில் நடிக்கிறார்.
