Karthigai deepam: கல்யாணத்திற்கு வர மறுத்த அபிராமி.. தீபா கழுத்தில் ஏறுமா கார்த்தியின் தாலி.. கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கார்த்திக் கல்யாண மண்டபத்தில் தன்னுடைய அம்மாவை தேடி தேடி பார்க்க எங்கும் இல்லாமல் போனதால் மீனாட்சி மற்றும் அருணாச்சலமிடம் அம்மா பற்றி விசாரிக்கிறான்.
முதலில் எதை எதையோ சொல்லி சமாளிக்கும் இவர்கள் ஒரு கட்டத்தில் அபிராமி வீட்டுக்கு சென்று விட்ட விஷயத்தை சொல்லி விடுகின்றனர். இதனால் கார்த்தி நானே வீட்டுக்கு சென்று அம்மாவை கூட்டி வருகிறேன் என கிளம்பி செல்கிறான்.
இங்கே மீனாட்சி, கார்த்தி எப்படியாவது தீபா கழுத்தில் தாலி கட்டி விட வேண்டும்.. என்ன நடக்க போகுதுன்னு தெரியல என தவித்துக் கொண்டிருக்கிறாள். பிறகு மணப்பெண் ரூம் அருகே வர அங்கிருந்த பெண்கள் ரெடி ஆகி விட்டார்கள், நாங்களே கூட்டிட்டு வர்றோம் என்று சொல்லி மீனாட்சியை அனுப்பி வைக்கின்றனர்.
பிறகு முகம் மூடப்பட்ட நிலையில் தீபா மணமேடையில் ஏற்றி உட்கார வைக்கப்படுகிறார். செல்ஃபி பாட்டி லட்ச லட்சமா செலவு பண்ணி கல்யாணம் பண்றோம், ஆனா என்னடா இது பொண்ணோட முகத்தை மூடி வெச்சி இருக்கீங்க என்று கேட்க அது பெண் வீட்டோட வழக்கமாம், அவங்க இப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல செல்பி பாட்டி அமைதியாகிறார்.
ஐஸ்வர்யா நீ தீபா கழுத்துல கார்த்தி தாலி கட்டுவான்னு நினைச்ச ஆனா இப்போ நான் நினைச்ச மாதிரி நட்சத்திரா கழுத்துல தான் தாலி கட்ட போறான் என மீனாட்சியை வெறுப்பேற்றுகிறாள்.
ஒரு பக்கம் நட்சத்திரா குடோனில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருக்க, இங்கே கார்த்திக் வீட்டுக்கு வந்து அபிராமியை கல்யாண மண்டபத்திற்கு கூப்பிட அபிராமி வர மறுக்கிறாள். முதலில் பல காரணங்களை சொல்லும் அபிராமி பிறகு சித்தர் சொன்ன விஷயங்களை சொல்ல நீங்க இல்லாம என்னால கல்யாணம் செய்ய முடியாது என கார்த்தி சொல்கிறான்.
இருந்தாலும் அபிராமி தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்க கார்த்திக், நட்சத்திரா மேல எனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கு என்று சொல்கிறாள். நட்சத்திரா தான் உனக்கு ஏத்த ஜோடி, அம்மா உனக்கு எப்பவும் நல்லது மட்டும் தான் நினைப்பேன் என சொல்லி இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என சொல்கிறாள்.
பிறகு சரி நீங்க வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க உங்க கையால தாலியாவது ஆசீர்வாதம் பண்ணி கொடுங்க என்று கார்த்திக் கேட்க, அபிராமி வீட்டில் தாலி ஏதாவது இருக்கா என தேட கடைசியில் கோயிலில் இருந்து வந்த கூடையில் தவறுதலாக வந்த தீபாவின் தாலியை எடுத்து சாமி முன்னாடி வேண்டி கார்த்தியிடம் கொடுக்கிறாள் அபிராமி.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்