Karthigai deepam: மாஸ் என்ட்ரி.. ஏலத்தில் களம் இறங்கிய கார்த்தி; முகம் பார்க்கமால் செயின் வாங்கிய தீபா!- கா., தீ அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மாஸ் என்ட்ரி.. ஏலத்தில் களம் இறங்கிய கார்த்தி; முகம் பார்க்கமால் செயின் வாங்கிய தீபா!- கா., தீ அப்டேட்

Karthigai deepam: மாஸ் என்ட்ரி.. ஏலத்தில் களம் இறங்கிய கார்த்தி; முகம் பார்க்கமால் செயின் வாங்கிய தீபா!- கா., தீ அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 25, 2023 12:44 PM IST

அதனை தொடர்ந்து மீனாட்சி கார்த்திக்கிடம், பல்லவி கோயிலுக்கு வந்து செயின் வாங்கிக் கொள்வதாகவும் ஆனால் முகத்தை காட்ட மாட்டேன் என சொன்னதாகவும் சொல்ல கார்த்திக் சரி என்று சம்மதம் தெரிவிக்கிறான்.

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், நேற்றைய எபிசோட்டில் அபிராமி பல்லவிக்கு கிப்ஃட் கொடுக்க வேண்டும் என்று சொன்னாள். 

கார்த்திகேயன் தீபாவிடம் பல்லவியை பற்றி பெருமையாக பேசினார். இந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்க்கலாம். 

சிதம்பரம் கார்த்திக்கு சவால் விட பதிலுக்கு கார்த்திக், உங்களால் என்னை அவ்வளவு சீக்கிரம் ஜெயித்து வெளியே அனுப்ப முடியாது என சவால் விடுகிறான்.

அதனை தொடர்ந்து மீனாட்சி கார்த்திக்கிடம், பல்லவி கோயிலுக்கு வந்து செயின் வாங்கிக் கொள்வதாகவும் ஆனால் முகத்தை காட்ட மாட்டேன் என சொன்னதாகவும் சொல்ல, கார்த்திக் அதற்கு சரி என்று சம்மதம் தெரிவிக்கிறான்.

அதன் பிறகு அபிராமி கொடுத்த செயின் உடன் கார்த்திக் கோயிலுக்கு வர, தீபா பல்லவியாக முகத்தை மறைத்துக் கொண்டு, பின்னால் நின்று கொண்டு கையை மட்டும் நீட்டினாள்

கார்த்திக்கும் உங்களுடைய வார்த்தையை நான் மதிக்கிறேன் என்று சொல்லி, செயினை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

அதன் பிறகு மீனாட்சி தீபாவிடம், நீ கார்த்திக்கிடம் உண்மையை சொல்லி இருக்கலாம்; நிச்சயம் அவர் உன்னை ஏற்றுக்கொண்டு இருப்பார். எல்லா பிரச்சினையும் இதோட தீர்ந்திருக்கும் என்று சொன்னாள்

பிறகு வடநாட்டு நிறுவனம் ஒன்று இசை உரிமையை வாங்குவதற்காக ஏலம் ஒன்றை நடத்துகின்றனர். அந்த கூட்டத்தில் சிதம்பரம் வந்ததும் ஆரம்பிக்கலாம் என்று பேச்சு அடிபட, இன்னொரு முக்கியமான நபர் வரனும் அதுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று சொல்லப்பட்டது.  பார்த்தால் அங்கு கார்த்திக் என்ட்ரி கொடுக்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.