Karthigai deepam: தீபா போஸ்டரை கிழித்த ரெளடிகள்.. மல்லுக்கட்டிய கார்த்திக்… கார்த்திகை தீபம் அப்டேட்!
தீபாவுக்காக ரவுடிகளிடம் மல்லு கட்டிய கார்த்திக்.. அவமானப்பட்ட அபிராமி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா, ரூபஸ்ரீ, மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து தீபாவின் போஸ்டரை கிழிக்க ப்ளான் போட்டு இருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ரவுடிகள் போஸ்டரை கிழித்து கொண்டிருக்க இளையராஜா இதை பார்த்து விடுகிறான். அதன் பிறகு அவன் ரவுடிகளிடம் எதுக்கு போஸ்டரை கிழிக்கறீங்க என்று கேட்க அவர்கள் அவனையும் அடித்து விடுகின்றனர்.
உடனே இளையராஜா கார்த்திக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறான். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போடுகிறான். அபிராமிக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இதை வீடியோ எடுத்து அபிராமிக்கு அனுப்பி என்ன உன் பையன் இப்படி சண்டை போடுறான் என்று கேட்கிறாள்.
இதனால் அபிராமி இதை அவமானமாக நினைத்து அருணாசலத்திடம் கார்த்திக்கு எதுக்கு இந்த வேலை? ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான் என சொல்லி வருத்தப்பட்டு, தீபாவை திட்ட அவர் கண் கலங்குகிறாள்.
பிறகு கார்த்திக் மீண்டும் அனைத்து இடங்களிலும் போஸ்டரை ஒட்ட சொல்ல போஸ்டர் ஒட்டியவர்கள் வேறு இடத்தில் வேலை இருப்பதால் வர முடியாது என சொல்லி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்