Karthigai Deepam: ‘என் புருஷன்னு கையெழுத்து போட நீ யார்டா?’ .. கார்த்தியை கலங்க வைத்த கீதா - கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest today september 5 2024 episode update indicates abirami health condition - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘என் புருஷன்னு கையெழுத்து போட நீ யார்டா?’ .. கார்த்தியை கலங்க வைத்த கீதா - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘என் புருஷன்னு கையெழுத்து போட நீ யார்டா?’ .. கார்த்தியை கலங்க வைத்த கீதா - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 05, 2024 03:43 PM IST

Karthigai deepam: மோசமான அபிராமி உடல்நிலை.. கார்த்திக்கின் நம்பிக்கையை உடைத்த கீதா - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘என் புருஷன்னு கையெழுத்து போட நீ யார்டா?’ .. கார்த்தியை கலங்க வைத்த கீதா - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘என் புருஷன்னு கையெழுத்து போட நீ யார்டா?’ .. கார்த்தியை கலங்க வைத்த கீதா - கார்த்திகை தீபம் அப்டேட்!

கீதா
கீதா

தீபா வந்தால் நான் மாட்டிப்பேனே?

அதாவது, மீனாட்சி ஐஸ்வர்யாவிடம் தீபா வருவதில் உனக்கு விருப்பம் இல்லையா என்று கேட்டாள். அதற்கு ஐஸ்வர்யா தீபா வருவதில் எனக்கு என்ன பிரச்சினை? தீபா வந்தால்தானே அபிராமி அத்தை உயிர் பிழைப்பாங்க என்று சொல்லி சமாளிக்கிறாள். இருப்பினும், மனதிற்குள் தீபா வந்தால் நான் மாட்டிப்பேனே என்றும் பயமும் அவளுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது.

 

இங்கே கீதா, எதுக்கு என்னுடைய ஹஸ்பண்ட்ன்னு கையெழுத்து போட்டீங்க என்று கார்த்தியிடம் சண்டையிடுகிறாள். இதனையடுத்து வேறு வழியில்லாமல், கார்த்திக் தீபா குறித்து மொத்த உண்மையையும் சொல்லி, தன்னுடைய வீட்டில் தீபாவாக அவளை நடிக்க கூப்பிட்டான். ஆனால், கீதாவோ முடியாது என்று மறுக்கிறாள். பிறகு கார்த்திக் ஹாஸ்பிட்டலில் கீதாவிற்கான பில்லை கட்டி விட்டு, அவள் கையில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறான்.

மோசமான நிலையில் அபிராமி

அடுத்து அபிராமிக்கு உடல்நிலை இன்னும் மோசமாக, தீபாவால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும். ஆகையால் அவரை உடனே வரச் சொல்லுங்கள் என்று டாக்டர்கள் ஷாக் கொடுக்கின்றனர்.

இதற்கிடையே ஐஸ்வர்யா மீனாட்சியிடம் தீபா இருக்கும் ஹாஸ்பிட்டல் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு, அவளை தீர்த்து கட்ட திட்டம் போட்டு கிளம்பி வருகிறாள். ஐஸ்வர்யா வந்த நேரத்தில் போலீஸ் உள்ளே வர அதை பார்த்து அவள் பயப்படுகிறாள்.

கீதா
கீதா

இன்னொரு பக்கம் கீதாவும் போலீசை பார்த்து எங்கே நாம் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து, கார்த்திக் கொடுத்த தீபாவின் புடவையை கட்டிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப்  ஆனாள். மற்றொரு பக்கம் ஐஸ்வர்யா அதே ரூமுக்குள் வர, பின்னாடியே வந்த போலீஸ், ஐஸ்வர்யாவை பார்த்து விட்டு, நாம் தேடி வந்த கீதா இல்லை என்று கிளம்பி செல்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.