Karthigai Deepam: போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா..கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest today september 3 2024 episode update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா..கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா..கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 03, 2024 11:02 AM IST

Karthigai deepam: போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா.. கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா..கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா..கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!
கைதியாக கீதா
கைதியாக கீதா

கீதா பலே திட்டம்

கார்த்திக் தீபா உருவத்தில் இருந்த பெண்ணை பார்க்காமல் இருந்த நிலையில், கார்த்திக் திரும்பிப் பார்க்க, அந்த பெண்ணின் முகம் தெரியாமல் இருக்கிறது. அப்போது முருகன் வடிவத்தில் இருந்த சிறுவன், அதெல்லாம் நீ எதுக்கு பாக்குற, ஏதாச்சு தப்பு பண்ணி இருப்பாங்க என்று சொல்கிறான்.

இங்கே தீபா வேடத்தில் இருக்கும் கீதா, விதவிதமாக ஆடர் செய்து வெளுத்து கட்ட, போலீஸ் என்னம்மா இப்படி சாப்பிடுற என்று கேட்கிறார்கள். அதற்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை கொல்ல போறீங்க; எனக்கு புடிச்சது சாப்பிட்டுக்கிறேன் என்று சமாளிக்கிறாள். ஆனால், அவளின் திட்டம், கண்டதை சாப்பிட்டு வாந்தி எடுத்து போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகி விட வேண்டும் என்பதாக இருந்தது.

பிறகு கார்த்திக், முருகன் வேடத்தில் இருக்கும் சிறுவனை வீட்டில் டிராப் செய்ய, அவன் நீ தேடிய பொருள் சீக்கிரம் கிடைக்கும் என்று சொல்லி வீட்டிற்குள் சென்றான். இங்கே கீதா வாந்தி எடுத்து போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பித்து ஓடி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

தீபாவை தேடி கிடைக்காத காரணத்தால், கார்த்திக் மனமுடைந்து போய் நேராக ஒரு கோயிலுக்கு வந்து உட்கார்ந்து, தீபாவை எப்படியாவது கண்ணுல காட்டுங்க என கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறான். இந்த சமயத்தில், அதே கோயிலுக்கு கடவுள் வேஷம் போட்டு, ஒரு குடும்பத்தினர் வந்தனர். அதில் முருகன் வேஷத்தில் இருந்த சின்ன பையன், கார்த்தியை பார்த்து, ஏன் சோகமா இருக்க சாப்பிடலையா? பசிக்குதா? என்று கார்த்தியை பார்த்து அவன் கேட்க, கார்த்திக் அதெல்லாம் இல்லை என்று சொன்னான்.

அதன் பிறகு கார்த்திக், ஒரு பொருள் தொலைந்து போச்சு, அதை கண்டுபிடித்து கொடுக்கச் சொல்லி, கடவுளிடம் கேட்டு வந்திருக்கேன் என்று சொல்ல, மறுபக்கம் போலீஸ் ஒரு பெண்ணை கைது செய்து அவளை என்கவுண்டரில் போட்டு தள்ள திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். இதைக் கேட்ட அந்த பெண் பசிக்குது சாப்பாடு வாங்கித் தாங்க என்று கேட்டாள்.

என்கவுண்டராகப்போகும் தீபா

போலீஸ் அதெல்லாம் வாங்கி தர முடியாது என சொல்ல, அதைக் கேட்டு தீபா போலவே இருக்கும் அந்தப் பெண், என்னை என்கவுண்டர்ல போட்டு தள்ள போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீங்க பேசுனதை நான் கேட்டுட்டேன். கடைசி ஆசையா சாப்பாடு தானே கேட்கிறேன், வாங்கி கொடுங்க என்று கேட்கிறாள். பிறகு போலீஸ் சரி வா என ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

இங்கே கார்த்திக் ரொம்ப நேரமாக அந்த சின்ன பையனிடம் பேசிக் கொண்டிருக்க, அந்த பையனின் குடும்பத்தினர் அவனை விட்டுச் சென்று விட்டனர். இதற்கிடையே, சிறுவன் பசிக்குது என்று சொல்ல, கைது செய்த பெண் வந்த ஹோட்டலுக்கே, இவர்களும் வந்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.