Karthigai deepam: துப்பாக்கி முனையில் தீபா..மயங்கி விழுந்த அபிராமி..தேடி அலையும் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deepam episode august 30 2024 update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: துப்பாக்கி முனையில் தீபா..மயங்கி விழுந்த அபிராமி..தேடி அலையும் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: துப்பாக்கி முனையில் தீபா..மயங்கி விழுந்த அபிராமி..தேடி அலையும் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 30, 2024 04:10 PM IST

Karthigai deepam: ரியா கார் ஓட்ட, ரம்யா தீபாவை துப்பாக்கி முனையில் வைத்து கடத்திச் செல்கிறாள். கார்த்திக் இன்னொரு பக்கம் இவர்களை தேடி அலைகிறான். தீபாவை காப்பாற்ற துடிக்கிறான். -

Karthigai deepam: துப்பாக்கி முனையில் தீபா..மயங்கி விழுந்த அபிராமி..தேடி அலையும் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: துப்பாக்கி முனையில் தீபா..மயங்கி விழுந்த அபிராமி..தேடி அலையும் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

துப்பாக்கி முனையில் தீபா

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரம்யாவின் முகத்திரை கிழிய, அவள் ரியாவுடன் சேர்ந்து தீபாவை கடத்திய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

 

ரம்யா
ரம்யா

அதாவது, தீபா கடத்தப்பட்டதும், கல்யாணம் நின்று போன சோகத்தில், அபிராமி மயங்கி விழுந்து உடல்நிலை மோசமடைந்தாள். இதனையடுத்து, அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். இன்னொரு பக்கம், ரியா கார் ஓட்ட, ரம்யா தீபாவை துப்பாக்கி முனையில் வைத்து கடத்திச்செல்கிறாள். கார்த்திக் இன்னொரு பக்கம் இவர்களை தேடி அலைகிறான் தீபாவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடிக்கிறான்.

அபிராமிக்கு ட்ரீட்மெண்ட்

ஹாஸ்பிடலில் அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் நடக்க, ரியா கார் ஒட்டி வரும் போது ஒரு சின்ன ஆக்சிடென்ட் செய்து, அங்கிருந்து தப்பித்து மலை உச்சிக்கு வருகின்றனர். மற்றொரு பக்கம் தீபா காரில் இருந்து தப்பிக்க, ரியாவும் ரம்யாவும் அவளை துரத்தி செல்கின்றனர். இதில், மூன்று பேருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது.

 

தள்ளுமுள்ளு
தள்ளுமுள்ளு

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திக் தீபாவை காப்பாற்றுவானா? மலை உச்சியில் நடக்கும் மோதலில் நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

கார்த்திக் எங்கே போனான் என்று தெரியாமல் எல்லோரும் தவித்து கொண்டிருக்க, அருண் மற்றும் ஆனந்த் அவனுக்கு போன் செய்தனர். ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. இன்னொரு பக்கம், தீபா ஆட்டோவில் மண்டபத்தை நோக்கி வேகவேகமாக பதறி வந்து கொண்டிருந்தாள்.

மணமேடையில் அதுவரை ரியா, தீபாவின் முகத்திரையை அணிந்து கொண்டு, தீபாவின் கெட்டப்பில் இருந்த நிலையில், முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால், தற்போது ரம்யா தீபாவின் முகத்திரையை அணிந்து கொண்டு மணமேடையில் அமர்ந்து இருந்தாள். அந்த சமயத்தில் தீபா கல்யாண மண்டபத்திற்கு வந்து விட, அனைவரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர்.

அபிராமி
அபிராமி

இதற்கிடையே, மயக்கத்தில் இருந்த அம்பிகா எழுந்து வெளியே வர ரம்யா அதிர்ச்சி அடைந்தாள். வெளியே இருப்பவள் தான் உண்மையான தீபா. மணமேடையில் இருப்பது ரியா என்று அவர் ரம்யாவின் முகத்திரையை கிழிக்க, அது ரம்யா என தெரிய வர அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.