Dulquer Salmaan: காரைக்குடியில் துல்கர் சேட்டா; ஓணத்திற்கு மஜாதான்;மாஸ் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dulquer Salmaan: காரைக்குடியில் துல்கர் சேட்டா; ஓணத்திற்கு மஜாதான்;மாஸ் அப்டேட்!

Dulquer Salmaan: காரைக்குடியில் துல்கர் சேட்டா; ஓணத்திற்கு மஜாதான்;மாஸ் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 03, 2023 04:17 PM IST

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அப்டேட் வெளியாகி இருக்கிறது

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

 

11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை

 

தமிழ், மலையாளத்தில் முன்னணி நட்சத்திர நடிகராக உள்ள துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. 

பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கூட்டணியின் முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட துல்கரின் கெட்அப்பைப் போலவே, இப்படத்தில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் DQ-வின் முரட்டுத்தனமான தோற்றமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காரைக்குடியில் தீவிரமான படப்பிடிப்பு 

 

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அபிலாஷ். என்.சந்திரன் எழுத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம் பான்-இந்திய நட்சத்திரமான துல்கரின் அடுத்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஷ்யாம் ஷஷிதரன் செய்கிறார், ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். முன்னதாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.