Then Maavattam: ’தென் மாவட்டம் படத்தில் கமிட் ஆகல’ யுவன்! இல்ல கமிட் ஆகிட்டீங்க! ஆர்.கே.சுரேஷ்! முற்றும் வார்த்தை மோதல்!
“மாமனிதன் படத்தின் வெளியீடு போது ஏற்பட்ட பிரச்சனையில் உங்களுக்கு பண உதவி செய்து அந்த சமயத்தில் உங்களுக்கு உற்ற நண்பனாக ஒரே நாளில் பிரச்சினை முடித்தோம் ஒப்பந்தத்தை சரியாக பாருங்கள் சகோதரரே நன்றி சந்திப்போம் தென் மாவட்டத்தில்”
ஆர்.கே.சுரேஷின் ‘தென் மாவட்டம்’ படத்தில் இசையமைப்பாளர்களோடு கமிட் ஆகவில்லை. இது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை என்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கராஜா தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒப்பந்தத்தை சரியாக பார்க்கவும், எங்களுடன் படத்திற்கு இசையமைக்க கையெழுத்து இட்டுள்ளீர்கள் என யுவன் சங்கர் ராஜாவுக்கு ஆர்.கே.சுரேஷ் பதில் அளித்துள்ளது பேசு பொருள் ஆகி உள்ளது.
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், சமீபத்தில் காடுவெட்டி திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் ஆருத்ரா கோல்டு நிறுவன பண மோசடி குறித்தும், அதில் தாம் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் பேசி இருந்தார்.
இந்த நிலையில், தான் எழுதி நடிக்கும் ‘தென் மாவட்டம்’ என்ற திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். அத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தென் மாவட்டம் திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்வீட் செய்துள்ளார். அதில், பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு தெளிவு ஏற்படுத்த விரும்புகிறேன். மேற்சொன்ன “தென் மாவட்டம்” படத்தின் இசையமைப்பாளர் என்பதற்காக என்னை யாரிடமும் கமிட் ஆகவோ, அணுகவோ இல்லை என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
எங்களுடன் ஒரு படத்திற்கும், ஒருலைவ் கான்சர்ட்டுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளீர்கள், அதை சரிவர பார்க்கவும் என ஆர்.கே.சுரேஷ் பதிவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷின், ஸ்டூடியோ 9 நிறுவனம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாமனிதன் படத்தின் வெளியீடு போது ஏற்பட்ட பிரச்சனையில் உங்களுக்கு பண உதவி செய்து அந்த சமயத்தில் உங்களுக்கு உற்ற நண்பனாக ஒரே நாளில் பிரச்சினை முடித்தோம் ஒப்பந்தத்தை சரியாக பாருங்கள் சகோதரரே நன்றி சந்திப்போம் தென் மாவட்டத்தில்” என பதிவிடப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்