Yuvan shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்.. ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!-yuvan shankar raja reply to thalapathy vijay goat songs negative comments in collage event - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yuvan Shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்.. ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!

Yuvan shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்.. ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 25, 2024 08:59 PM IST

Yuvan shankar raja: பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். - யுவன் தக் லைஃப் பதிலடி!

Yuvan shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்..  ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!
Yuvan shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்.. ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!

இவர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் தி கோட் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தத்திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத்திரைப்படத்தில் இருந்து யுவன் இசையில் வெளியான பாடல்கள் எதிர்மறை விமர்சனங்களை பெற்றன. யுவனையும் நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்தனர்.

தோல்வியில் இருந்து வெற்றி

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா, அங்கிருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். அப்போது தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது, "எல்லோருக்கும் வணக்கம், உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு "தோல்வியில் இருந்து வெற்றி" அதைப் பற்றித் தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்." என்றார்.

மேலும் "ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று என் மீது முத்திரை குத்தினர். இதனால், நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுதேன்.

பேசுகிற வாய் பேசிக் கொண்டே பேசிட்டேதான் இருக்கும்

அதன் பின்னர் எங்கு தவறு நடந்தது என்று யோசித்தேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்க துவங்கினேன். இப்படித்தான் இன்று இங்கு உங்கள் முன் நிற்கிறேன். இதில் உள்ள யோசனை என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது. தலை நிமிர்ந்த படி எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். இதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிகிறது.

எனக்கு வரும் கருத்துக்கள், பேச்சுகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால், இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள்," என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.