Vadivelu: வேர்த்து விறுவிறுத்து போன வடிவேலு.. நாகூர் அனிபா செய்த மாயம்! - ராசா கண்ணு பாடல் உருவான விதம்! - யுகபாரதி!
Vadivelu: கிட்டதட்ட 2 மணி நேரமாக வடிவேலு பாடிக்கொண்டே இருக்கிறார். ஆனால், அவரால் ஒழுங்காக பாடவே முடியவில்லை அவருக்கு வேர்த்து விறுவிறுத்து ஏதோ போல ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் நம்மை பாட வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. - யுகபாரதி!

Rasa Kannu Song: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்தப்படத்தில் இடம் பெற்ற ‘மலையில தீ பிடிக்குது ராசா’ பாடலை வடிவேலு பாடினார். இந்தப்பாடல் உருவான விதம் குறித்து அந்தப்பாடலை எழுதிய யுகபாரதி முன்னதாக மேடை ஒன்றில் பேசினார்.
ஒழுங்காக பாடவே முடியவில்லை
இது குறித்து அவர் பேசும் போது, ‘மலையில தீ பிடிக்குது’ பாடலை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நான், மாரி ஆகியோர் வடிவேலு பாட வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், வடிவேலு நான் பாடவே மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வடிவேலுக்கு போன் செய்து வடிவேலுவை பாடுங்கள் என்றார். இதையடுத்து அவர் பாடுவதற்கு ஒத்துக் கொண்டார்.