Yash 19 Title: ‘காய்கள மறுபடியும் அடுக்குங்க.. வர்றவன் கேங்ஸ்டர் இல்ல.. மான்ஸ்டர்..’ - யாஷின் அடுத்தப்பட தலைப்பு இங்கே!
கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் யாஷின் அடுத்த படம் குறித்தான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

கே.ஜி.எஃப் நடிகர் யாஷின் அடுத்தப்பட அப்டேட் இங்கே!
கன்னட சினிமாவில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் திரைப்படம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.
தாயின் ஆணையை நிறைவேற்ற, ஒரு சிறுவன் கேங்ஸ்டராக மாறும் பயணத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப்படம், மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இந்த வரவேற்பை தொடர்ந்து கடந்த ஆண்டு கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த பாகமும் மக்களிடம் பம்பர் ஹிட் அடித்து 1000 கோடியை தாண்டி வசூல் செய்தது. இந்த இரண்டு பாகங்களில் நடித்ததின் வழியாக, பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தார் இந்தப்படத்தின் கதாநாயகன் யாஷ்.