Vijay: விஜய்க்கு ஓட்டு போடமாட்டேன்.. நடிகர் அரவிந்த் சாமியின் வீடியோ வைரல்!
Arvind Swamy: "நான் ரஜினி ரசிகன்; நான் கமல் ரசிகன்; எனக்கு விஜய் பிடிக்கும்; என்பதற்காக எல்லாம் ஓட்டு போட மாட்டேன் மக்கள் எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் ஓட்டு போட மாட்டேன் அவர்கள் சொல்லும் விஷயத்தை ஏதேனும் மாற்றம் ஏற்பட போகிறதா உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில் ஏராளமானோரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரிட்டு அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி சின்னம் அறிவிக்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
அதே சமயம் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து நடிகர் அரவிந்த்சாமி பழைய வீடு பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் "நான் ரஜினி ரசிகன்; நான் கமல் ரசிகன்; எனக்கு விஜய் பிடிக்கும்; என்பதற்காக எல்லாம் ஓட்டு போட மாட்டேன் மக்கள் எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் ஓட்டு போட மாட்டேன் அவர்கள் சொல்லும் விஷயத்தை ஏதேனும் மாற்றம் ஏற்பட போகிறதா உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? நீங்கள் பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால் உங்களால் நல்ல திட்டங்களை தீட்ட முடியும் என்று என்னால் எப்படி நம்ப முடியும். உங்களுக்கு நான் மக்களை காப்பாற்றுவேன் என்ற நல்ல எண்ணம் இருக்கலாம். ஆனால் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்வதற்கும் மக்களின் தேவை அறிந்து திட்டம் தீட்டுவதற்கும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ விஜய் அரசியலுக்கு வந்துள்ள இந்த சூழலில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது