தமிழ் செய்திகள்  /  Entertainment  /  With Only 5 Days Left For The Release The Team Of Lal Salaam Has Released A New Poster

Lal Salaam: 'இன்னும் ரிலீஸுக்கு 5 நாட்களே’ - புதிய போஸ்டரை வெளியிட்ட லால் சலாம் படக்குழு

Marimuthu M HT Tamil
Feb 04, 2024 05:55 PM IST

லால் சலாம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

லால் சலாம்
லால் சலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து வருகிறார். முன்னதாக இவர் தனது மாஜி கணவர் தனுஷை வைத்து 3, கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். தவிர, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசைதான் ஆகியப் பாடலையும், அப்படத்தில் ரீமாசென்னுக்கு டப்பிங் வாய்ஸும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் ஏதாவது சாதித்துவிட வேண்டும் என நினைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது திருமணப் பந்தத்தில் இருந்து முறிந்து வெளியே வந்தபின், பயணி என்னும் மியூசிக்கல் வீடியோவை இயக்கினார். பின், கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ’லால் சலாம்’ என்னும் ஒரு படத்தை இயக்கினார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்குண்டான படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை, மும்பை ஆகியப் பல இடங்களில் நடைபெற்று முடிந்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இந்தப் படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்று இருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள 'லால் சலாம்' திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதற்காக சமீபத்தில் சென்னை சாய் ராம் கல்லூரியில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. ரஜினிகாந்த், விஜய் குறித்து பேசியது வைரலானது. அதேபோல், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன் தந்தை சங்கி கிடையாது எனக் கூறியதும் சர்ச்சையானது. அது ஒருவகையில் படத்திற்கு புரோமோஷனாகவும் அமைந்தது.

 

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில், தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தீவிரமாய் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அதன்படி, ‘லால் சலாம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும், வீடியோ ஒன்றையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்தப் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் வெள்ளை தொப்பியுடன் கண்ணாடி அணிந்து பார்ப்பதுபோலும், அவரது பின்புறமும் விக்ராந்தும் விஷ்ணு விஷாலும் இருப்பது போலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, இப்படத்தில் நடித்த தான்யா பாலகிருஷ்ணன் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. சில ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு சப்போர்ட் செய்த தான்யா, அப்போது தமிழர்களை பிச்சைக்காரர்கள் என விமர்சித்து இருந்தார். இந்நிலையில் அது மீண்டும் டிரெண்ட் ஆன நிலையில் மன்னிப்புக்கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.