Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!-will smith share sadhguru photo in his instagram page post viral on social media - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!

Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 06, 2024 09:20 PM IST

Will Smith: வில் ஸ்மித், 'நான் எப்பொழுதும் வலிமையான காப்பாளர்களால் சூழப்பட்டு உள்ளேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.மேலும், அவர் பகிர்ந்த புகைப்படத்தில், வில் ஸ்மித் அவரின் தந்தை மற்றும் கார்த்தே கிட் படத்தில் நடித்து புகழ்பெற்ற அவரின் முதல் மகன் இருக்கின்றனர்.

Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!
Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!

வலிமையான காப்பாளர்கள் சூழ இருக்கிறார்கள்.

 

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில், சமீபத்தில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் 'சத்குரு' அவர்களின் படமும் இடம்பெற்று உள்ளது. அந்தப் புகைப்படங்களுடன் வலிமையான காப்பாளர்கள் தன்னை என்றும் சூழ்ந்து இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

நடிகர் வில் ஸ்மித், உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றபேட் பாய்ஸ்(Bad Boys),மென் இன் பிளாக்(Men in Black),ஐ ரோபாட் (I Robot), தி பர்சுயூட் ஆப் ஹாப்பினஸ் (The Pursuit of Happiness)ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். அவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர், 'நான் எப்பொழுதும் வலிமையான காப்பாளர்களால் சூழப்பட்டு உள்ளேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

அவர் பகிர்ந்திருந்த முதல் புகைப்படத்தில், வில் ஸ்மித் அவரின் தந்தை மற்றும் கார்த்தே கிட் படத்தில் நடித்து புகழ்பெற்ற அவரின் முதல் மகன் இருக்கின்றனர். அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.

மூன்றாவது புகைப்படத்தில் வில் ஸ்மித், பிரபல எழுத்தாளர் ஜெய் ஷெட்டி மற்றும் சத்குரு ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

2020-ம் ஆண்டு நடந்த சந்திப்பு!

கடந்த 2020-ஆம் ஆண்டு சத்குரு அவர்கள் அமெரிக்காவில் உள்ள பூர்வகுடிமக்களின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக அந்நாட்டில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அப்போது சத்குருவை தனது வீட்டிற்கு வில் ஸ்மித்  அழைத்து இருந்தார். அதன்படி சத்குருவும் ஸ்மித்தின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது வெளியான புகைப்படங்களும், வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.