Bigg Boss Saravanan : ’ஆபாசமாக பேசி.. 30 அடி ஆட்களுடன் வந்து மிரட்டுகிறார்’ நடிகர் சரவணன் மீது மனைவி பரபரப்பு புகார்!
திரைப்பட நடிகர் சரவணன் தன்னை மிரட்டி வருவதாகவும், தான் வாங்கிய வீட்டில் இருந்து தன்னை வெளியே போக சொல்வதாகவும், அவரது மனைவி முதல்வர் தனிப்பிரிவில் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகர் சரவணன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே நடிகர் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சரவணன். அதன்பின்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பருத்தி வீரன் திரைப்படத்தில் சித்தப்பாவாக நடித்து புகழ் பெற்றார்.
பிக்பாஸ் வீட்டில் சரவணன் இருந்த போது கல்லூரி படிக்கும்போது பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியிருந்தது மிகப்பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார்கள். சரவணன் மன்னிப்பு கேட்ட பின்பு சில நாட்கள் கழித்து பெண்கள் விஷயத்தில் கருத்துக்களை கூறியதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு கொடுத்து தான் வந்தனர். நடிகர் சரவணன் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், திரைப்பட நடிகர் சரவணன் தன்னை மிரட்டி வருவதாகவும், தான் வாங்கிய வீட்டில் இருந்து தன்னை வெளியே போக சொல்வதாகவும், அவரது மனைவி முதல்வர் தனிப்பிரிவில் பரபரப்பு புகாரை அளித்துள்ளார். இவரது மனைவி சூரியஸ்ரீ தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனி பிரிவில் சரவணன் மீது பரபரப்பு புகார் அளித்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காதலித்து தன்னை திருமணம் செய்து கொண்ட சரவணன், சில ஆண்டுகளுக்கு முன் மவுலிவாக்கத்தில் தான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வைத்து வீடு வாங்கினார். வாங்கிய வீட்டை அவரது பெயரில் பதிவு செய்து கொண்டார். பட வாய்ப்பு இல்லாத போது, தனது சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்டார். பிக்பாஸ் சென்று வந்த பிறகு கையில் பணம் வந்தவுடன், ஸ்ரீதேவி என்ற பெண்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக கூறினார்.
கடந்த சில நாட்களாக சரவணன் தனது வீட்டிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆபாசமாக பேசி மிரட்டுகிறார். மேலும் 30 அடி ஆட்களுடன் வந்து மிரட்டுகிறார். இது தொடர்பாக அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும்”என்றுஅவர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்