Vetrimaaran:8 வருட காத்திருப்பு; வெற்றிதான்வேணும்; ஆர்த்தி அடம்பிடிக்க காரணம்?
வெற்றிமாறனுக்காக 8 வருடங்கள் காத்திருந்தது ஏன் என்று அவருடைய மனைவி ஆர்த்தி பேசியிருக்கிறார்
இன்று தமிழ் சினிமாவின் தனித்துவமான, தவிர்க்க முடியாத இயக்குநர் வெற்றிமாறன். தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு பூந்தென்றல் மற்றும் கதிரவன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு ஆர்த்தி கொடுத்த பேட்டி ஒன்றில், 8 வருடங்கள் காத்திருந்து வெற்றிமாறனை திருமணம் செய்து கொண்டது ஏன் என்று பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ அவரிடம் நான் காதலை சொன்ன போது நான் படம் செய்ய 8 வருடங்கள் அல்லது 10 வருடங்கள் ஆகும் என்று சொன்னார்.
அது அந்த வயதில் என்னுடைய மண்டைக்குள் ஏறவே இல்லை. அது 1997 அல்லது 1998 வருடமாக இருக்கலாம். அப்போது படம் எடுப்பது இவ்வளவு ஒரு கடினமான விஷயம் என்று எனக்கு தெரியாது.
எனக்கு தெரிந்தது எல்லாம் கமல் மற்றும் ரஜினி படங்கள்தான். எனக்கு கமல்ஹாசன் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் உடன் சேர்ந்த பின்னர் நானும் இயக்குநர்களின் பெயர்களை வைத்து படங்களை பார்க்க ஆரம்பித்தேன்.
ஆனால் எனக்கு அவர்தான் வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தேன். காதலித்து அவரை கரம் பிடித்து இத்தனை வருடம் ஆகிவிட்டது. நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன். ஒருவருக்காக 8 வருடங்கள் அல்லது 10 வருடங்கள் காத்திருப்பது பெரிய விஷயமில்லை.
காரணம், காதலர்களாக இருக்கும் போது நாம் சந்திக்கிறோம். பேசுகிறோம். பின்பு வீட்டுக்கு சென்று விடுகிறோம். எங்களுக்குள் நிறைய நேரம் இருந்தது. ஆனால் இதில் மிகவும் கடினமான விஷயம் என்னவென்றால் அந்த கால இடைவெளியில் நாங்கள் ஒன்றாக இணைந்து இருந்தது. காத்திருப்பை விட இங்கு அது மிகவும் முக்கியமான விஷயம்; ஒன்றாக இணைந்து இருக்கும் போதுதான் பிரச்சினைகள் அதிகமாக வரும்.அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் அந்த உறவின் வலிமை இருக்கிறது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்