Vikram: ‘டேய் சியான்..’ கென்னடி டூ விக்ரம் டூ சியான் விக்ரம்.. கென்னடியை செதுக்கிய சேது! - சுவாரசிய கதை தெரியுமா?-why is the thangalaan actor vikram called chiyaan what is the title meaning - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vikram: ‘டேய் சியான்..’ கென்னடி டூ விக்ரம் டூ சியான் விக்ரம்.. கென்னடியை செதுக்கிய சேது! - சுவாரசிய கதை தெரியுமா?

Vikram: ‘டேய் சியான்..’ கென்னடி டூ விக்ரம் டூ சியான் விக்ரம்.. கென்னடியை செதுக்கிய சேது! - சுவாரசிய கதை தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 27, 2024 08:40 PM IST

Vikram: பிரபல நடிகரான விக்ரம் சியான் விக்ரமாக எப்படி மாறினார். அதற்கான பின்னணி காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Vikram: ‘டேய் சியான்..’ கென்னடி டூ விக்ரம் டூ சியான் விக்ரம்.. கென்னடியை செதுக்கிய சேது! - சுவாரசிய கதை தெரியுமா?
Vikram: ‘டேய் சியான்..’ கென்னடி டூ விக்ரம் டூ சியான் விக்ரம்.. கென்னடியை செதுக்கிய சேது! - சுவாரசிய கதை தெரியுமா?

கென்னடி விக்ரம் ஆனது எப்படி?

நடிகர் விக்ரமின் அப்பா, ஜான் விக்டர்; அம்மா ராஜேஸ்வரி. சிறுவயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த விக்ரமிற்கு அவர்கள் உண்மையில் வைத்திருந்த பெயர் கென்னடி. திரைத்துறையில், பல வருட முயற்சியின் பலனாக கென்னடி 1990 ம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார்.

விக்ரம்
விக்ரம்

சினிமாவிற்கு நுழைந்த கென்னடிக்கு அந்தப் பெயர் உகந்ததாக படவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த கென்னடி, தன்னுடைய அப்பாவின் பெயரிலிருந்து ‘வி’ என்பதையும், தன்னுடைய பெயரில் இருந்து ‘க்’ என்பதையும். அம்மாவின் பெயரில் இருந்து ‘ர’ என்பதையும் எடுத்துக் கொண்டு, விக்ரம் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.

சியான் விக்ரம் வந்தது எப்படி?

நடிகர் விக்ரமிற்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால், அது பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் தான். கல்லூரி இளைஞனாகவும், மன நோயாளியாகவும், இரு வேறு பரிணாமத்தில் தன்னுடைய நடிப்பை கனக்கச்சிதமாக வெளிப்படுத்தி இருந்தார் விக்ரம்.

சேது படத்தில் விக்ரம்!
சேது படத்தில் விக்ரம்!

அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அனைவரும் ‘சியான்’ என்று அழைப்பார்கள். அந்தப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த காரணத்தினால், அந்த கதாபாத்திரத்தின் அடைமொழியையே தன்னுடைய பெயரின் முன்னால் சேர்த்துக்கொண்டார் விக்ரம். அப்படித்தான் அவர் சியான் விக்ரம் ஆனார். அதன் பின்னர் சினிமா பயணம் ஏறுமுகமாகவே இருந்தது. சியான் என்றால் கடவுள், தாத்தா, மூத்த நபர் என்று பொருள் வரும் என்று சொல்லப்படுகிறது.

சிக்கிக்கொண்ட சியான்

அண்மையில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தை விளம்பரப்படுத்தும் போது, அவரிடம் திரைத்துறையில் அவரின் சமகால போட்டியாளர்களான அஜித்குமார், சூர்யா அளவுக்கு நீங்கள் பிரபலமாக இல்லையே என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இங்கே!

மதுரையில் நடந்த சந்திப்பு!

மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் விக்ரமிடம், "உங்களுக்கு அஜித், சூர்யா அளவுக்கு ரசிகர்கள் இல்லையே" என்று கேட்டார். அதற்கு பதற்றம் இல்லாமல் பதிலளித்த விக்ரம் "என் ரசிகர்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி தெரிய வேண்டுமென்றால் நீங்கள் தியேட்டருக்கு வந்து பாருங்கள்" என்று கூறி அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தார். இருப்பினும், கோலிவுட்டின் முதல் மூன்று முன்னணி ஹீரோக்களில் நீங்கள் இல்லையே என்று அந்த நிருபர் கேட்டதால் விவாதம் தொடர்ந்தது. அதற்கு பதில் அளித்த விக்ரம், "டாப் ஹீரோ லிஸ்டில் இருப்பதுமுக்கியமல்ல. பார்வையாளர்கள்தான் முக்கியம்.

தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்

நானும் தூள், சாமி போன்ற கமர்சியல் படங்களில் நடித்தவன்தான். அதனால் மற்ற ஹீரோக்கள் போலவும் எனக்கும் படம் நடிக்கத் தெரியும். ஆனால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும். அந்த வகையில் தங்கலானுக்கு என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை எல்லோருமே ஏதோ ஒரு வகையில் என் ரசிகர்கள்தான்" என்றார்.

இதற்கிடையே குறுக்கிட்ட தொகுப்பாளர் உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் குறிப்பிடப்பட்ட மற்ற ஹீரோக்களுக்கு 'ஹேட்டர்கள்' இருப்பதாகவும், விக்ரமுக்கு அப்படி யாரும் இல்லை என்றும் கூறினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.